Fiat – ஃபியட் கார்களில் இனி இந்த நிறத்தில் கார்கள் வராது ? ஏன் தெரியுமா ?

இத்தாலி நாட்டின் ஃபியட் நிறுவனம் ஜூன் 26 முதல் இனி சாம்பல் நிறம் அல்லது கிரே நிறத்தை முற்றிலும் தனது கார்களில் நீக்குவதாக புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பலரும் விரும்பும் நிறங்களில் ஒன்றான கிரே நிறத்தை ஏன் நீக்குகிறோம் என்ற காரணத்தை ட்வீட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் விற்கப்படும் நான்கு புதிய கார்களில் ஒன்றுக்கு மேற்பட்டவை, சாம்பல் நிறமாகும். மிகவும் பிரபலமான நிறமாக உணர்ந்த போதிலும் இந்த முடிவை எடுத்ததாக ஃபியட் கூறுகிறது.

Fiat Grey colour

ஜூன் 26 முதல், ஃபியட் தனது பயணிகள் வாகன வரிசைக்கான வண்ணத் தட்டுகளில் இருந்து சாம்பல் நிறத்தை திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது. ‘வாழ்க்கையில் வண்ணங்களின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்கான’ முயற்சியே இந்த முடிவிற்குக் காரணம். முன்னோக்கிச் செல்ல, ஃபியட் அதன் நிறங்களில் வானம், சூரியன், கடல் மற்றும் பூமியின் நிழல்களை சிறப்பாகக் குறிக்கும் வண்ணங்கள் மட்டுமே இனி கொண்டிருக்கும்.

“நாங்கள் விதிகளை தகர்க்கிறோம்,  ஃபியட் சாம்பல் கார்களின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இது சவாலானது மற்றும் மகிழ்ச்சி, வண்ணங்கள் மற்றும் நம்பிக்கையின் பிராண்டாக ஃபியட்டின் தலைமையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தாலி வண்ணங்களின் நாடு, இன்று முதல் ஃபியட்டின் கார்களும் கூட,” என்று ஃபியட் தலைமை நிர்வாக அதிகாரி ஆலிவர் ஃபிராங்கோயிஸ் கூறினார்.

ஃபியட் புதிய பிராண்ட் கோஷத்தை வெளியிட்டுள்ளது, அதில் ‘இத்தாலி. வண்ணங்களின் நிலம். ஃபியட். தி பிராண்ட் ஆஃப் கலர்ஸ்.’ (‘Italy. The Land Of Colours. Fiat. The Brand Of Colours) என குறிப்பிட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி புதிய எலக்ட்ரிக் ஃபியட் 600e கிராஸ்ஓவரை வெளியிடும் என்றும் ஃபிராங்கோயிஸ் உறுதிப்படுத்தினார்.

ஃபியட்டின் வெளிநாட்டு பயணிகள் வாகன வரம்பு – 500 ஹேட்ச்பேக், 500X க்ராஸ்ஓவர், பாண்டா ஹேட்ச்பேக் மற்றும் டிப்போ குடும்பத்தை உள்ளடக்கியது – வெள்ளை, ஆரஞ்சு, சிவப்பு, நீலம், பச்சை, தங்கம் மற்றும் கருப்பு நிறங்களில் மட்டுமே வரவுள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள், ஃபியட் தனது முழு பயணிகள் வாகன வரிசையும் முழுமையாக மின்சா வாகனங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே ஃபியட் இந்திய சந்தையிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில், மீண்டும் ஃபியட் கார்கள் வரும் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு பக்கம் ஃபியாட் ரசிர்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.