ஐபோன் 13 மொபைல் பழையதாக இருந்தாலும் டிரெண்டிங்கில் உள்ளது. ஐபோன் மொபைல் மீது மோகம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆபர்கள் பெரிதும் உதவியாக இருக்கும். தங்களின் ஆப்பிள் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஐபோன் 15 விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் ஐபோனில் இருக்கும் பழைய மாடல்களுக்கு திடீர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஐபோன் 13 மொபைலுக்கும் திடீர் ஆபர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளிப்கார்ட்டில் விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த மொபைல் ஆபரை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Flipkart-ல் தள்ளுபடி
Flipkart-ல் APPLE iPhone 13 (நைட், 128 ஜிபி) விலை ரூ. 60,999. 12 விழுக்காடு தள்ளுபடிக்குப் பிறகு ரூ.69,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையும் உங்களுக்கு அதிகமாகத் தோன்றினாலும், இப்போது நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இந்த மாடலில் உங்களுக்கும் நல்ல ஒப்பந்தம் கிடைக்கிறது. ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் இருக்கின்றன.
ஐபோன் 13 எக்ஸ்சேஞ்ச் சலுகை
ஐபோன் 13-ன் இந்த வேரியண்டில் ரூ.33000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இதனை நீங்கள் நம்புவது சற்று கடினம். ஆனால் அது உண்மை. இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பொருந்துபவர்கள் ரூ.60,999 செலுத்த வேண்டியதில்லை. முழு தகுதியும், பிளிப்கார்ட் மற்றும் ஐபோன் நிறுவனம் வழங்கும் அனைத்து வழிமுறைகளும் உங்களுக்கு பொருந்தும்பட்சத்தில் ஐபோன் 13 சீரிஸ் மொபைலை வெறும் ரூ.27,999-க்கு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்லலாம்.
இது ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம். வாடிக்கையாளர்கள் இந்த ஒப்பந்தத்தை மிகவும் விரும்புகின்றனர். நினைத்துப் பார்க்காத விலைக்கு ஐபோன் மொபைலை தன்வசப்படுத்த முடியும் என்பதால், தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள முற்படுங்கள். மற்றவர்கள் இந்த மொபைல் எப்படி வாங்குவது என்பது குறித்து பரிசீலித்து தள்ளுபடியை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முற்படுங்கள்.