கோவை ஷர்மிளாவுக்கு கமல் கொடுத்த ரூ.16 லட்சம் கார்.. புக்கிங் முடிந்தது.. அடுத்த ஐடியா இதுதான்!

கோவை:
கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்து பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இளம்பெண் ஷர்மிளாவுக்கு கமல் பரிசளித்த ரூ.16 லட்சம் மதிப்பிலான காரின் புக்கிங் பணிகள் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து, ஓரிரு தினங்களில் ஷர்மிளா அந்தக் காரில் சீறிப்பாய தயாராகி வருகிறார்.

கோவையில் தனியார் பேருந்து நிறுவனத்தில் பெண் ஓட்டுநராக பணிபுரிந்தவர் ஷர்மிளா. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர் இப்பணியில் சேர்ந்தார். ஆனால் அதற்குள்ளாக அவரது வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மானாவாரியாக பரவியால் புகழின் உச்சம் தொட்டார் ஷர்மிளா. அவர் பஸ் ஓட்டும் வீடியோவை பகிர்ந்து “சிங்கப்பெண்ணே..” என்ற பாடலுடன் இளைஞர்கள் ‘வைப்’ செய்து வந்தனர்.

அவரது பேருந்தில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பயணம் செய்ததால் அவரது பப்ளிசிட்டி இன்னும் அதிகரித்தது.

இந்த சூழலில்தான், திமுக எம்.பி. கனிமொழி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓட்டுநர் ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்தார். அப்போது அவரிடம் பெண் பயிற்சி கண்டெக்டர் டிக்கெட் கேட்டதால் ஷர்மிளா கோபம் அடைந்தார். இதுதொடர்பான தகராறில் ஷர்மிளாவை பேருந்து நிறுவன உரிமையாளர் பணிநீக்கம் செய்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பான நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான

அந்தப் பெண்ணுக்கு கார் பரிசளித்தார்.

அவருக்கு பரிசளிக்கப்பட்டது ரூ.16 லட்சம் மதிப்பிலான மகேந்திரா மரோசோ சொகுசு கார் ஆகும். இந்நிலையில், இந்த காரின் புக்கிங் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதையடுத்து, நாளை அல்லது நாளை மறுதினம் இந்த கார் ஷர்மிளாவின் வீட்டு வாசலில் நிற்கும் எனக் கூறப்படுகிறது. இந்த கார் மூலம் தனியாக ‘கால் டாக்சி’ சேவையில் ஷர்மிளா ஈடுபடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.