Gautham Menon – யார் கமல் ரசிகர்.. இந்த சண்டையில் சட்டை கிழியாது.. லோகேஷ் கனகராஜுக்கு கௌதம் மேனன் பதில்

சென்னை: Gautham Menon (கௌதம் மேனன்) கமலின் பெரிய ரசிகர் யார் என்ற சண்டையில் சட்டை கிழியாது என லோகேஷ் கனகராஜுக்கு கௌதம் மேனன் பதில் சொல்லியிருக்கிறார்.

கமல் ஹாசனுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றார்கள். சாதாரண மக்கள் எந்த அளவுக்கு கமல் ரசிகர்களாக இருக்கிறார்களோ அதே அளவு சினிமா துறையில் இருக்கும் நடிகர்களும், இயக்குநர்களும் கமலின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். கௌதம் மேனனில் ஆரம்பித்து இப்போது வந்திருக்கும் லோகேஷ் கனகராஜ்வரை அந்த லிஸ்ட் சென்றுகொண்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜின் சம்பவம்: கோவையில் கமலின் ஷூட்டிங்கை தூரமாக பார்த்து, சென்னையில் கமலின் வீட்டை ஏக்கத்தோடு பார்த்தவர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தையும் இயக்கிவிட்டார். அதுவும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. இதனையடுத்து லோகேஷின் டிமாண்ட் திரைத்துறையில் அதிகரித்துள்ளது. மேடைக்கு மேடை தான் கமல் ஹாசனின் எவ்வளவு பெரிய வெறித்தனமான ரசிகர் என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்தக்கூடியவர்.

கௌதம் மேனன்தான் ஃபர்ஸ்ட்: இதற்கிடையே கமல் ஹாசனின் ரசிகர்கள் லிஸ்ட்டில் கௌதம் மேனன் தான் எப்போதும் முதலிடம் என பலரும் கூறுவார்கள். கமலை வைத்து அவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு படம் தரமான ஃபேன் பாய் சம்பவம் என இன்றும் சிலாகிப்பவர்கள் உண்டு. சமீபத்தில்கூட வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டது.

ரசிகர் பதிவு: இந்தச் சூழலில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், எனக்கென்னமோ யார் ஆண்டவரின் பெஸ்ட் பேன் பாய் டைரக்டர் என்ற சண்டையில் முதலிடத்தை பிடித்தது கௌதம் மேனன் தான் என்று தோன்றுகிறது. இதனை சொல்வதற்கு என்னை மன்னிக்கவும் லோகேஷ் கனகராஜ் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு லோகேஷ் கனகராஜ் சந்தேகமே வேண்டாம் ப்ரோ. கௌதம் மேனன் தான் என பதிலளித்தார்.

Gautham Menon has replied to Lokesh Kanagaraj about who is Kamals biggest fan

சட்டை கிழியாத சண்டை: இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனன் இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில், அது நீங்களும் நாயகன் மீண்டும் வரான் வரும் வரைக்கும் தான் . நான் அதை விட பெரிதாக பண்ண முயற்சிக்கணும். இது ஒரு நல்ல சேலஞ்ச். ஆனா இந்த சண்டையில சட்டை கிழியாது. அன்பு மட்டுமே என குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

மேடையில் சண்டை: முன்னதாக, மேடை ஒன்றில் பேசியிருந்த நடிகர் மணிகண்டன், ‘நான் கமல் ஹாசனின் தீவிர ரசிகன். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்று சொல்லும்போதெல்லாம் அடிக்க வேண்டும் என தோன்றும். லோகேஷ் அது என்னுடைய இடம்’ என ஓபனாக பேசியிருந்தார். அதனையடுத்து அதே மேடையில் பேசிய லோகேஷ், ‘ஒன்னு இல்ல 100 மணிகண்டன் வந்தாலும் சட்டையை கிழிச்சிட்டு சண்டைக்கு போவேன். கமல் சார பத்தி நான்தான் பெருமையா பேசுவேன்’ என பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.