கோஹிமா: நாகாலாந்தில் நிலச்சரிவால் உருண்டு வந்த மெகா சைஸ் பாறை கார்கள் மீது விழுந்ததில் 2 பேர் பலியாயினர். நகாலாந்து மாநிலம் கோஹிமா-திமாப்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலை வழியாக மலைப்பாதை உள்ளது.
இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலை மோசமடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன.
அப்போது சுமோக்கிதிமா என்ற பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ‘ மொ சைஸ் ‘பாறை ஒன்று உருண்டு இரு கார்கள் மீது விழுந்ததன. இதில் இரு கார்களும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் பலியாயினர். பாறை உருண்டு கார்கள் மீது விழும் வீடியோ காட்சி சமூக வைரலாக பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement