
எழுத்தாளர் பாலகுமாரன், தனது ‘மெர்க்குரிப் பூக்கள்’ நாவலுக்காக இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர்.

கமல் நடித்த ‘நாயகன்’, ‘குணா’ உள்ளீட்ட படங்களுக்கும், ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படத்துக்கும் வசனம் எழுதியவர். ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘உல்லாசம்’, ‘சீட்டிசன்’, ‘முகவரி’, ‘மன்மதன்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட படங்களின் வழியே எழுத்திலும் தனது பங்களிப்பைச் செலுத்தியவர்.

‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்துக்காக. தமிழ்நாடு அரசின் சிறந்த வசனகர்த்தா விருது பெற்றார்.

நடிகர் பாக்யராஜ் திரைக்கதை. வசனம் எழுதி நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் இயக்குநர் பாலகுமாரன்.

ராஜராஜ சோழன் ஆட்சிமுறையையும் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றையும் கதைக்களமாகக்கொண்டு பாலகுமாரன் எழுதிய படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ‘உடையார்’ வரலாற்றுப் புதினம் அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று.

“நான் ஒரு தடவை சொன்னா… நூறு தடவை சொன்ன மாதிரி!” ‘பாட்ஷா’ திரைப்படத்துக்காக பாலகுமாரன் எழுதி புகழ்பெற்ற வசனம்.

‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல”. “நீங்க நல்லவரா… கெட்டவரா?” ‘நாயகன்’ படத்தில் பிரபலமான பல வசனத்தை எழுதியவர், பாலகுமாரன்.

“தொடர்கதையைப் படிச்ச வாசகர்கள் எல்லாரும் இப்ப சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. வாசகர்கள்மேல அந்த வருத்தம் மட்டும் எனக்கு உண்டு. ஆனாலும், அவங்களைச் சொல்லி என்ன இருக்கு? இது விஷீஷுவல்ஸுக்கான காலம்.’ -பாலகுமாரன்.

“ஒரே நேரத்தில் ஏழு தொடர்கள் எழுதினேன். அந்தந்தத் தொடர்களுக்கானக் குறிப்பை, கதாபாத்திரத்தின் பெயர்களை வீட்ல இருந்த மர பிரோவுல, செல்ஃப்ல, ஏன்… பாத்ரூம்லகூட எழுதி ஒட்டிவெச்சிருப்பேன். பல்லு தேய்க்கிறபோது, துவடற்றபோதுன்னு எல்லா நேரங்கள்லயும், என் கண்ணு அங்கேயேதான் இருக்கும்.” -பாலகுமாரன்.

ஜனங்களோட விருப்பம் என்னவோ, அதுதான் சினிமா: அதுதான் பத்திரிகை; அதுதான் நாடகம். ஆனா, இலக்கியம் மட்டும்தான் ‘நான் சொல்றதைக் கேளு’னு மக்கள்கிட்ட சொல்லும். அதுல ஒரு பகுதியா நான் இருந்திருக்கிறேன். இருப்பேன்னு என்னாலே பெருமையா சொல்லிக்க முடியும்.” -பாலகுமாரன்.