திமாப்பூர்: சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வீடியோ சினிமா படப்பிடிப்பு காட்சிகள்தானா என நினைக்கும் வகையில் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் நாகாலாந்து மாநிலத்தின் மலைப்பகுதிகளில் நிகழ்ந்த ரியல் சம்பவம் என்பதுதான் அதிரவைக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் திமாப்பூர், மலையில் இருக்கும் தலைநகர் கோஹிமாவைப் போல முக்கியமான நகரம். நாகாலாந்து மாநிலத்தை சமவெளிப் பகுதிகளுடன் இணைக்கக் கூடிய மையமான நகரம் திமாப்பூர்.
திமாப்பூரின் சுமோகெடிமா பழைய நெஞ்சாலை எண் 29-ல் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள்தான் இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
நெடுஞ்சாலையில் கார்கள், லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் இருந்து பெரும் பாறை உருண்டு விழும்போது அது பறந்த நிலையில் முதலில் ஒரு கார் மீது விழுகிறது.. அந்த கார் அப்பளமாக நொறுங்கி சிதறுகிறது. அதே வேகத்தில் அருகே நின்ற கார் மீதும் மோதி பள்ளத்தாக்கில் விழுந்தது பாறை. 2-வது கார் அப்படியே தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த பாறை தாக்குதல்கள் நிகழ்ந்த அதே நேரத்தில் அருகேயே மற்றொரு பெரும் பாறை பறந்த நிலையில் மற்றொரு காரை தாக்கி லாரி பறந்த நிலையில் லாரியின் மேல் பகுதியில் மோதி பள்ளத்தாக்கில் விழுந்தது.

பெரும் பெரும் பாறை கற்கள் இப்படி பறந்து பறந்து கார்கள் மீது விழுந்து நொறுக்கிய வீடியோ காட்சிகள் கார் ஒன்றில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ காட்சிகள்தான் இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த பாறைகள் தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
#WATCH | A massive rock smashed a car leaving two people dead and three seriously injured in Dimapur’s Chumoukedima, Nagaland, earlier today
(Viral video confirmed by police) pic.twitter.com/0rVUYZLZFN
— ANI (@ANI) July 4, 2023