Maamannan: மாமன்னன் படம் ஓடுனால் என்ன, இருந்தா என்ன?, அதா பசியை தீர்க்கப் போகுது?: எடப்பாடி பழனிசாமி

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாரி செல்வராஜ் இயக்கத்தில்
உதயநிதி ஸ்டாலின்
, வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் வசூல் மன்னனாக மாறியிருக்கிறது.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
படம் ரிலீஸானதில் இருந்து ஒவ்வொரு நாளும் கோடிகளில் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக நிர்வாகி எடப்பாடி பழனிசாமி மாமன்னன் பற்றி பேசினார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவர் கூறியதாவது,

குட்டி அமைச்சர் வந்திருக்கிறார். ரெட் ஜெயண்ட்னு, அவர் மூவீஸ் எடுத்திருக்கிறார். எப்படி ஓடுது, அதை மீறி கேட்டால் நீங்களே கேட்கிறீர்கள் மாமன்னன் படம் எப்படி என்று. நாட்டில் விலைவாசி ஏறிப் போச்சு இதை கேளுங்க. மாமன்னன் படம் ஓடினால் என்ன, இருந்தா என்ன, இதா நாட்டு மக்களுக்கு தேவை. இதா வயிற்று பசியை போக்கப் போகுது. இதுல நிறைய விமர்சனம் வேற.

மாமன்னன் படத்தில் ஒரு வேதனைக்குரிய விஷயம் இந்த ஊடகம், பத்திரிகை நிறைய போடுறாங்க. இப்பொழுது இந்த ஊடகம், பத்திரிகை வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். என்னமோ இவங்க தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திரைப்படத்தின் மூலமாக பெரிய எழுச்சியை ஏற்படுத்தியதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அது பொய்.

நான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முதலாக மேதகு ஆளுநரின் உத்தரவுப்படி எங்களுடைய அன்றைய சட்டப்பேரவை தலைவர் தனபால் அவர்கள் சட்டசபையை கூட்டினார். நீங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று.

அண்ணன் தனபால் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். அவரை இருக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி மைக்கை உடைத்து, பெஞ்ச்சை உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டு அவருடைய புனிதமான இருக்கையில் அமர்ந்த கட்சி தான் திமுக கட்சி. மறுந்துடாதீங்க. இவங்களா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்றாங்க? என்றார்.

மாமன்னன் படத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த எம்.எல்.ஏ. மாமன்னனாக நடித்திருந்தார் வடிவேலு. அந்த கதாபாத்திரம் நிஜத்தில் அதிமுக முன்னாள் சட்டசபை தலைவர் தனபாலை குறிப்பதாக பேச்சு எழுந்தது. அப்படி என்றால் உயர் சாதியை சேர்ந்த வில்லன் ரத்னவேலு கதாபாத்திரம் எடப்பாடி பழனிசாமியை குறிக்கிறதா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Maamannan:மாமன்னன் நேற்று மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?: ரஜினியால் மேலும்…

இதற்கிடையே மாமன்னன் படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. படத்தை பாராட்டி ட்வீட் போட்டார். மேலும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு போன் செய்து தன் வீட்டிற்கு வரவழைத்து மனதார பாராட்டினார்.

ரஜினி பாராட்டியதை பார்த்த அவரின் ரசிகர்களோ, நாங்கள் கண்டிப்பாக மாமன்னன் படத்தை தியேட்டரில் பார்ப்போம் தலைவா என தெரிவித்துள்ளனர்.

மாமன்னன் படம் ரிலீஸான நாளில் இருந்து சமூக வலைதளங்களில் அது பற்றியே பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது வடிவேலு தான். இத்தனை ஆண்டுகளாக காமெடி செய்து சிரிக்க வைத்த வடிவேலுவை திரையில் தெரியவில்லை. அந்த அளவுக்கு மாமன்னனாகவே மாறிவிட்டார் என படம் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்.

Maamannan:மாமன்னன் வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுக்கணும்: நயன்தாரா பட நடிகை

இதற்கிடையே மாமன்னனுக்காக வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.