ஆப்ரேஷன் சக்சஸ்.. ஆனால் வாழ்க்கை பெயிலியர்.. குடும்பம் நடத்தாமல் 2 மாதங்களில் கம்பி நீட்டிய கணவன்!

பிரயாக்ராஜ் (அலகாபாத்): உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் இல் ஆண் ஆக இருந்த நபர், தன்னை கட்டாயப்படுததி பெண்ணாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்த நண்பன், ‘கணவன் மனைவியாக’ இரண்டு மாதங்கள் வாழ்ந்த பிறகு தன்னைக் கைவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறுவதற்கு பாலின அறுவை சிகிச்சை செய்து கொள்வது இயற்கைக்கு மாறாக அவ்வப்போது நடக்கிறது.அப்படி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் சிலர் தங்களது துணையால் ஏமாற்றத்தை சந்திப்பது அதிகமாக நடக்கிறது.

அப்படித்தான் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள கௌசாம்பியைச் சேர்ந்த 22 வயது நபர் ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . ராதிகா 2016ம் ஆண்டு முதல் ஹிஷாம்பத் மாவட்டத்தைச் சேர்ந்த தனது நண்பரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினாராம். இதன்படி பாலின மாற்று அறுவை கிசிச்சை செய்து கொண்டுள்ளார் ராதிகா. பெண்ணாக மாறிய அவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ளூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளார்கள்.

பின்னர் அவர்கள் கணவன்-மனைவியாக வாழத் தொடங்கி இருக்கிறார்கள். அப்போது ராதிகாவிடம் அந்த நபர் சமூகம் மற்றும் குடும்பத்தினர் எவ்வளவு எதிர்த்தாலும் அழுத்தம் இருந்தபோதிலும் ஒருபோதும் உன்னை கைவிட மாட்டோம் என்று உறுதியளித்தாராம். ஆனால் சொன்னபடி வாழ்க்கையில் நடக்கவில்லை. ராதிகாவை அவர் புறக்கணிக்க தொடங்கி உள்ளார். திருமணம் ஆன இரண்டு மூன்று மாதங்களிலேயே ராதிகாவை கைவிட்டுவிட்டு பெற்றோருடன் அந்த இளைஞர் சென்றுவிட்டார். அதன்பின்னர் போன் பண்ணினால் கூட ராதிகாவின் கணவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராதிகா, கௌசாம்பி எஸ்பி பிரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவாவிடம் அந்த பெண் அளித்த புகாரில், என்னை புறக்கணித்த கணவர், 2-3 மாதங்களுக்கு முன்பு கைவிட்டுவிட்டார். என் அழைப்புகளையும் அவர் ஏற்பது இலலை. போன் செய்தால் மோசமான விளைவு ஏற்படும் அவரது தந்தையும் மாமாவும் என்னை மிரட்டுகிறார்கள்.

நான் 8 லட்சம் ரூபாய் செலவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன், பல ஆண்டுகளாக நான் பாட்டு மற்றும் நடனம் மூலம் சம்பாதித்த 6 லட்சத்தை இப்போது அவர்கள் என்னிடம் இருந்து பறித்துள்ளார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதன் பேரில், ராதிகாவின் கணவர், தந்தை மற்றும் மாமா மீது ipc செக்சன் 377 (இயற்கைக்கு மாறான குற்றம்), 406, 504 மற்றும் 506 உள்பட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SCST சட்டத்தின் கீழும், பணத்தைப் பறித்ததாகவும், சாதிவெறிக் கருத்துக்களைக் கூறியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த குற்றச்சாட்டை ராதிகாவின் கணவர் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதுபற்றி கௌசாம்பி எஸ்பி பிரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா கூறும் போது, பாலியல் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறித்த விவரங்களைக் கேட்டபோது ​​அவரால் வழங்க முடியவில்லை . சாக்குப்போக்குகளை கூறிக்கொண்டே இருந்தார். அவர் திருநங்கை என்று கூறுகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது,” என்று கூறினார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.