சங்கர் ஜிவால் எடுக்கும் புதிய அஸ்திரம்: ரெடியான அடுத்த லிஸ்ட் – முட்டி மோதும் அதிகாரிகள்!

ஜூன் 30ஆம் தேதியுடன் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்புவும், தமிழ்நாடு டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவும் பணி ஓய்வு பெற்றனர். தலைமைச் செயலாளாரக சிவ்தாஸ் மீனாவும், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவாலும் நியமிக்கப்பட்டனர். பொறுப்புக்கு வந்த உடன் காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றும் சங்கர் ஜிவால்தலைமைப் பொறுப்புக்கு புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டதும், அவர்களது நிர்வாக வசதிக்காக தங்களுக்கு கீழ் உள்ள நிலைகளில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கம் தான். அந்த வகையில் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவு வெளியிட்டார். தற்போது சங்கர் ஜிவால் குறிப்பிட்ட சில ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி ஒரு பட்டியலை தயார் செய்துள்ளதாக கூறுகிறார்கள்.
உளவுத் துறையில் மாற்றம்!மாவட்ட வாரியாக, மண்டல வாரியாக காவல் துறை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளில் சிலர் இடமாற்றம், பொறுப்பு மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வர உள்ளதாக கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் உளவுத்துறையிலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வர சங்கர் ஜிவால் விரும்புவதாக சொல்கிறார்கள்.
உளவுத் துறை சறுக்கியது எங்கே?தமிழ்நாடு உளவுத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓரிரு நிகழ்வுகளில் சறுக்கியது விமர்சனத்துக்கு உள்ளானது. உதாரணத்திற்கு கள்ளக்குறிச்சி பள்ளியை குறிவைத்து நடைபெற்ற கலவரம், கோவை கார் வெடி விபத்து ஆகிய சம்பவங்கள் உளவுத்துறைக்கு நெருக்கடியை கொடுத்தன. இந்நிலையில் சங்கர் ஜிவால் உளவுத்துறைக்கு டிஜிபி அந்தஸ்தில் புதிய பதவியை உருவாக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அதிகாரிகள் யார்?​​
ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்து தகவல் வெளியான நிலையில் முக்கிய பணி இடங்களைப் பெறவும் உளவுத்துறையில் உச்ச பதவியை பிடிக்கவும் காவல்துறை அதிகாரிகள் மட்டத்தில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் காவல்துறை வட்டாரத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.