போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக நிர்வாகியால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமரியாதை செய்யப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்தவரை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது வீட்டுக்கு அழைத்து காலை கழுவி மன்னிப்பு கேட்டார். மேலும் அவரோடு பக்கத்தில் ஒன்றாக அமர்ந்து இருவரும் பேசியபடி மதிய உணவு எடுத்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் குப்ரி கிராமத்தில் வசித்து வருபவர் தாஷ்மத் ராவத். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா இரவில் போதையில் தாஷ்மத் ராவத்தின் முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரவேஷ் சுக்லாவின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. குற்றம் செய்தவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார் என சிவ்ராஜ் சிங் கூறினார். மேலும் இதுதொடர்பான புகாரில் போலீசார் தீவிரமாக தேடி தலைமறைவாக இரந்த பிரவேஷ் சுக்லாவை கைது செய்தனர். அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிமித்து கட்டியிருந்ததாக கூறி பிரவேஷ் சுக்லாவின் வீடும் அதிரடியாக இடிக்கப்பட்டது. இதற்கிடையே தான் பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த தாஷ்மத் ராவத்தை, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு வந்த அவருக்கு மாலை அணிவித்து வரவேற்ற அவர் அவரது காலை கழுவி மன்னிப்பு கோரினார்.
அதன்பிறகு சிவ்ராஜ் சிங் சவுகான், தாஷ்மத் ராவத்தை தன்னுடன் அமரவைத்து மதிய உணவு சாப்பிட்டார். இந்த வேளையில் சிவ்ராஜ் சிங் சவுகான், தாஷ்மத் ராவத் ஆகியோர் பேசியபடியே மதிய உணவு சாப்பிட்டனர். இதற்கிடையே தான் தாஷ்மத் ராவத்தை சிவ்ராஜ் சிங் சவுகான் அழைத்து காலை கழுவி மன்னிப்பு கோரினார்.
அதன்பிறகு தாஷ்மத் ராவத்துடன், முதல்வர் சிவ்ராஜ் சிங் சோபாவில் அமர்ந்து ஒன்றாக சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அப்போது தாஷ்மத் ராவத்துக்கு பல்வேறு வகையான உணவு பரிமாறப்பட்டது. இந்த வேளையில் அவர்கள் 2 பேரும் சகஜமாக பேசி கொண்டனர். சிவ்ராஜ் சிங் சவுகான் கேட்ட கேள்விக்கு தாஷ்மத் ராவத் பதிலளித்தபடி உணவு சாப்பிட்டார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.