தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார். காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் என பல திட்டங்கள் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமும், அதிகாரிகளிடமும் கேட்டறிந்து வருகிறார்.
மாவட்ட வாரியாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்ற விதம், மாணவர்களிடத்திலும் மக்களிடத்திலும் இவை ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து அறிய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2023-24 கல்வி ஆண்டுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
38 மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள்:
சென்னை – உஷா ராணி,கோவை – அர்ச்சனா பட்நாயக்,மதுரை – இளம் பகவத்காஞ்சிபுரம் – ஸ்ரீ வெங்கட ப்ரியாசெங்கல்பட்டு – ஆர்த்திதிருவள்ளூர் – அறிவொளிதிருப்பத்தூர் – வி.சி.ராமேஷ்வரமுருகன்வேலூர் – கண்ணப்பன்ராணிபேட்டை – உமாகடலூர் – லதாதேனி – நாகராஜமுருகன்சேலம் – குப்புசாமி
கள்ளகுறிச்சி – சேதுராமவர்மாதிருப்பூர் – எஸ்.உமாநாமக்கல்- ராஜேந்திரன்அரியலூர் -கோபிதாஸ்விருதுநகர் – ஜெயக்குமார்தஞ்சாவூர் – சசிகலாகிருஷ்ணகிரி – சுகன்யாராமநாதபுரம் – சாந்திபுதுகோட்டை – செல்வராஜ்கரூர் – நரேஷ்திண்டுக்கல் – ஸ்ரீதேவிதர்மபுரி – குமார்ஈரோடு – அமுதவள்ளிமயிலாடுதுறை – பொன்னையாபெரம்பலூர் – என்.ஆனந்திதிருச்சி – ராமசாமி
சிவகங்கை – செல்வகுமார்திருநெல்வேலி – குமார்விழுப்புரம் – பூபதிநீலகிரி – அருளரசுதென்காசி – ஞானகௌரிதூத்துக்குடி – திருவளர்செல்விதிருவண்ணாமலை – அய்யனன்திருவாரூர் – ஆறுமுகம்கன்னியாகுமரி – சம்பத்
இந்த அதிகாரிகள் பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன, அவை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து துறைக்கு தெரியப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.