பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்: அசத்தும் அசாம் மாநில அரசு!

கல்வி கற்கும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மாணவர்களை மையமாகக் கொண்டு பலத் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. கல்வி நிலையங்களை நோக்கி மாணவர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும் அரசின் திட்டங்கள் பயன்படுகின்றன.

இந்த திமுக ஆட்சியில் கூட காலை உணவுத்திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் அசாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்க உள்ளதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

அசாம் அமைச்சரவை கூட்டம் நேற்று (ஜூலை 5) நடைபெற்றது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் மிதி வண்டிகள் வழங்குதல், வேளாண் பல்கலைக்கழகங்களிலும், செவிலியர் கல்லூரிகளிலும் ஆறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குதல், வறுமையில் தவிக்கும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் Orunodoi திட்டத்தை விரிவுபடுத்துதல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடங்குவதற்கான விதிகளை எளிமையாக்குதல், உணவு பாதுகாப்பு திட்டத்தை விரிவாக்குதல் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடித்து ஆடத் தயாரான எடப்பாடி: திகைத்து நிற்கும் பாஜக – வேகமெடுக்கும் அதிமுக!

மாநிலப் பாடத்திட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்வில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகின்றன. இது அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுவதில்லை மதிப்பெண் அடிப்படையிலேயே வழங்கப்பட உள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கங்கப்பட உள்ளன. அதேசமயம் மாணவர்கள் 75 சதவீதம் பெற்றிருந்தால் மட்டுமே ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அசாமில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 4372 பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 3 லட்சத்து 78 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

மிதிவண்டிகளை கொள்முதல் செய்வதற்காக அசாம் அரசு 167 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நமது அமைச்சரவையின் இன்றைய முடிவு, கல்வியை மேம்படுத்தவும், நமது மாணவர்களின் விருப்பங்களுக்கு சிறகுகளை வழங்கவும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.