திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இலஞ்சி பாறை அரசு குடும்ப சுகாதார மையத்தின் தலைமை டாக்டர் சஜீவன் 45.
சில நாட்களுக்கு முன் தாயாருடன் சிகிச்சைக்காக வந்த 14 வயது சிறுமியை தன் அறைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரியின் பேரில் டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முன் ஜாமின் கேட்டு டாக்டர் சஜீவன் தாக்கல் செய்த மனுவை திருச்சூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து திருச்சூர் சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement