Jawan: ட்ரெய்லரில் சம்பவம் செய்த அட்லீ… ஜவான் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?

மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் நிறுவனம் சொந்தமாக தயாரித்துள்ளது.

ஜவான் டீசர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, ட்ரெய்லர் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.

அதுமட்டும் இந்தப் படத்தின் ப்ரீ தியேட்டர் ரிலீஸ் மட்டும் 250 கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் ஜவான் ட்ரெய்லர்

தமிழில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி அவர் தற்போது பாலிவுட் பக்கம் பிஸியாகிவிட்டார். பாலிவுட்டில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இக்கூட்டணியில் தொடங்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.

முன்னதாக இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகவிருந்தது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன், ப்ரியா மணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர். 500 கோடி பட்ஜெட்டில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள ஜவான், பாக்ஸ் ஆபிஸில் 1500 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ-தியேட்டர் ரிலீஸ் பிஸினஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ ரைட்ஸ் அனைத்தும் சேர்ந்து 250 கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளதாம். இதுதவிர தமிழ், தெலுங்கு தியேட்டர் ரைட்ஸும் பல கோடிகளுக்கு சேல்ஸ் ஆகியுள்ளதாம். இதில் தமிழ் தியேட்டர் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தெலுங்கு தியேட்டர் ரைட்ஸை தில் ராஜூ வாங்கியுள்ளாராம்.

இந்நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக காணப்படும் அட்லீ, டீசர், ட்ரெய்லர் இரண்டையும் ரெடி செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதில் டீசர் இன்னும் ஒரிரு தினங்களில் சர்ப்ரைஸ்ஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ட்ரெய்லர் அப்டேட்டையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் அட்லீ. அதனால், இன்னும் சில தினங்களுக்கு ஷாருக்கான் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் வெயிட்டிங்கில் உள்ளது.

பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ள ஜவான், அட்லீக்கு பாலிவுட்டில் பெரிய ஓபனிங் கொடுக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்தப் படம் வெளியானதும் விஜய்யின் தளபதி 69 படத்தை இயக்கவுள்ளாராம் அட்லீ. அது தவிர வருண் தேஜா நடிக்கும் படத்தை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.