Super Star Vijay: அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்… ப்ளு சட்டை மாறனை வச்சு செய்த தளபதி ரசிகர்கள்!

சென்னை: திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் எனவும், சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்தும் அடிக்கடி விவாதங்கள் எழுவது வழக்கம்.

கோலிவுட்டில் இதுவரை இந்த இரண்டிலும் மாஸ் காட்டி வருவது சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.

இதனையடுத்து தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதில் விஜய்யை இழுத்துவிட்டு வேடிக்கை காட்ட நினைத்த ப்ளு சட்டை மாறனை தளபதி ரசிகர்கள் வச்சு செய்துள்ளனர்.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். ஆனால், கடந்த சில வருடங்களாக ரசிகர்களின் எண்ணிக்கையில் அதே மாஸ் காட்டி வரும் ரஜினியால் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்ய முடியவில்லை.

அதுமட்டும் இல்லாமல் ரஜினியின் சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. இதனால், கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி ரசிகர்கள் முன்பு எழுந்தது. விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என நீண்ட இந்தப் பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இடம்பெற்றுள்ளார். ஆனால், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கொளுத்திப் போட்டார் சரத்குமார்.

 Super Star Vijay: Fans choose Vijay as the next superstar in a poll conducted by Blue Sattai Maran

சரத்குமாரின் இந்த பேச்சு செம்ம வைரலானது. அதுமட்டும் இல்லாமல் ரஜினி – விஜய் ரசிகர்கள் இடையேயும் சூடான விவாதங்கள் எழுந்தன. திரை பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், சினிமா விமர்சகர்கள் என பலரும் ரஜினி தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என அடித்துக் கூறினார். இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற மாவீரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயனை குட்டி ரஜினி என அழைத்தார் நடிகை சரிதா.

இதனால், திரையுலகில் மீண்டும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில், விஜய்யை எப்போதும் வம்பிழுத்து வரும் ப்ளு சட்டை மாறன், டிவிட்டரில் ஒரு வாக்கெடுப்பு நடத்தினார். அதில், “அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?” என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும், சிம்பு, தனுஷ், சிஎஸ்கே, விஜய் என நான்கு ஆப்ஷன்களையும் கொடுத்திருந்தார். இதில் சிஎஸ்கே அணியை ஏன் சேர்த்துள்ளார் என்பது ப்ளு சட்டை மாறனுக்கே வெளிச்சம்.

இருந்த போதிலும் ப்ளு சட்டை மாறனின் இந்த வாக்கெடுப்பில் பலரும் விஜய்க்கு தான் ஓட்டுப் போட்டுள்ளனர். அதன்படி, 56.6% பேர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என வாக்களித்துள்ளனர். சிம்புவுக்கு 14 சதவீதம் பேரும், தனுஷுக்கு வெறும் 7.8 சதவீதம் ரசிகர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜய்க்கு ஆதரவு கிடைக்காது என நினைத்து தான் ப்ளு சட்டை மாறன் இந்த வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால், விஜய் ரசிகர்கள் அவரை வச்சு செய்துவிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல், விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்லை, இப்போதும் கூட அவர் தான் சூப்பர் ஸ்டார் எனக் கூறியுள்ளனர். மேலும், ரசிகர்களிடம் சண்டை மூட்டி விடுவதே ப்ளு சட்டை மாறனின் வேலை எனவும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ப்ளு சட்டை மாறனின் இந்த வாக்கெடுப்பு டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.