Maamannan: புட்ரா தம்பி: மாமன்னன் சூர்யாவுக்கு லேப்டாப் பரிசளித்த உதய்ணா

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாரி செல்வராஜ் இயக்கத்தில் பக்ரீத் பண்டிகை அன்று தியேட்டர்களில் வெளியான மாமன்னன் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. வடிவேலு,
உதயநிதி ஸ்டாலின்
, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த அந்த படம் ரிலீஸான 7 நாட்களில் ரூ. 40 கோடி வசூல் செய்துள்ளது.

திமுகவில் சாதிய பாகுபாடா?ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி பதில்!!
வார இறுதிநாட்களில் தியேட்டருக்கு செல்லும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வசூலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தனக்கு வெற்றிப்படத்தை கொடுத்த மாரி செல்வராஜுக்கு விலை உயர்ந்த மினி கூப்பர் காரை பரிசாக கொடுத்து அசத்தினார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் தான் அவர் மேலும் ஒருவருக்கு பரிசு கொடுத்திருக்கிறார்.

அது வேறு யாரும் அல்ல சூர்யா தான். சூர்யா என்றால் நடிகர் சூர்யா சிவகுமார் அல்ல மாமன்னன் படத்தில் இளம் அதிவீரனாக நடித்த சூர்யா. கல்லூரியில் படித்து வரும் சூர்யாவுக்கு லேப்டாப்பை பரிசாக கொடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அப்பா வடிவேலுவுடன் பல ஆண்டுகளாக பேசாமல் இருப்பார் உதயநிதி ஸ்டாலின். அது ஏன் என்பதற்கான ஃபிளாஷ்பேக் காட்சியில் தான் இளம் அதிவீரனாக நடித்திருந்தார் சூர்யா.

மாமன்னன் படம் ரிலீஸாதில் இருந்தே அனைவரும் வடிவேலுவின் நடிப்பை பற்றி தான் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக வடிவேலு படங்களில் அடி வாங்கியபோது சிரிப்பு தான் வந்தது. ஆனால் மாமன்னனில் அழுகை வந்தது. அதற்கு காரணம் வடிவேலுவை வித்தியாசமாக காட்டிய மாரி செல்வராஜ் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

மாமன்னனாகவே வாழ்ந்த வடிவேலுவை தேடிச் சென்று ஆளுயர மாலை அணிவித்து பாராட்டினார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் மாமன்னன் படத்தை பாராட்டி ட்வீட் போட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் மாரி செல்வராஜுக்கு போன் போட்டு நேரில் வரச் சொல்லி மனதார பாராட்டினார்.

மாமன்னன் நேற்று மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?: ரஜினியால் மேலும்…

ரஜினியுடன் மாரி செல்வராஜ் சிரித்த முகமாக நின்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. ரஜினியின் ட்வீட்டை பார்த்த தலவைர் ரசிகர்களோ, நாங்களும் மாமன்னனை கண்டிப்பாக பார்க்கிறோம் தலைவா என தெரிவித்துள்ளனர்.

மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக இருக்கும் அவர் முழு நேரம் மக்கள் பணி செய்யப் போகிறார். அதற்காக தான் படங்களில் நடித்தது போதும் என முடிவு செய்திருக்கிறார்.

அவர் நடிப்பில் வெளியான கடைசி படம் உதயநிதி ஸ்டாலினின் கெரியரில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கெரியரில் மிகப் பெரிய ஓபனிங் மாமன்னனுக்கு தான் கிடைத்தது.

படம் ரிலீஸானதில் இருந்து இதுவரை தினமும் கோடிகளில் தான் வசூல் செய்து கொண்டிருக்கிறது.

Maamannan:மாமன்னன் வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுக்கணும்: நயன்தாரா பட நடிகை

இதற்கிடையே மாமன்னன் படத்திற்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மாமன்னன் குறித்து உதயநிதி ஸ்டாலின் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

#மாமன்னன் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 465க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. #MAAMANNAN ஐ #Megablockbuster ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு எங்கள் அன்பும், நன்றியும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.