நெல்லை: ஒரு சாமியார் வடக்கில் இருந்து, நம்ம ஊருக்கு வந்துபோயுள்ளார்.. அதுவும் சங்கரன்கோயிலுக்கு வந்துள்ளார்.. அங்கு நடந்த ஒரு சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் மெயின் ரோட்டில், தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது… இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ஒருவர் தமிழகத்துக்கு வந்துள்ளார்.. இவர் ஒரு நிர்வாண சாமியார்.
புனித யாத்திரை: 30 நாள் புனித யாத்திரையாக இங்கு கிளம்பி வந்துள்ளார்.. ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கெல்லாம் சென்றுவிட்டு, போகிற வழியில் சங்கரன்கோவில் வந்திருரக்கிறார்.. அப்போது ராஜபாளையம் ரோட்டில் இருக்கும் அந்த தனியார் நகைக்கடைக்குள்ளே போனார் நிர்வாண சாமியார்..
அந்த ஓனரிடம் “ஹரித்துவாரில் இருந்து யாத்திரைக்கு வருகிறேன்.. இந்த பகுதியை கடக்க முயன்றேன்.. அப்பதான் திடீரென எனக்கு கடவுள் என்னிடம் வந்து அருள்வாக்கு சொன்னார்.. அதில், இந்த நகைக்கடைக்கு போய்ட்டு வா.. அங்கே கடையில் இருப்பவர்களை எல்லாம் ஆசீர்வாதம் செய்துவிட்டு போ என்று சொன்னார்.. அதனால்தான், இந்த கடைக்கு உங்களை எல்லாம் ஆசீர்வாதம் செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றார்..
கடை ஓனர்: இதைக்கேட்டதும் ஓனரும், கடை ஊழியர்களும் என்ன செய்வதென அறியாமல் திகைத்து நின்றனர். அதிலும் ஓனர், தலைகால் புரியாமல் திக்குமுக்காடிப்போனார்.. பிறகு, அந்த சாமியாரை, கையெடுத்து கும்பிட்டு, வரவேற்று உட்கார வைத்தார்.. அங்கிருந்தவர்கள் எல்லாரும், நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.. அப்போது கடையின் உரிமையாளர், நிர்வாண சாமியாரின் வழிசெலவுக்காக சிறிய ஒரு தொகையை கவருக்குள் வைத்து, அன்பளிப்பாக தந்திருக்கிறார்.
அதை வாங்கி கொண்ட அந்த நிர்வாண சாமியார், “இது என்னுடைய பூஜைக்கு மட்டுமே உண்டான செலவு, என்னுடைய ஆசீர்வாதம் கிடைத்தால் நீ இந்த ஊரிலேயே மிகப்பெரிய ஆளாய் வருவாய்” என்றார்..
நிர்வாண சாமியார்: இதைக்கேட்டதும், ஓனருக்கு குழப்பமாக இருந்திருக்கிறது.. ஆனால், சாமியாரோ, கடையின் நகைகள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது? அங்கே என்னை அழைத்து செல் என்று கேட்டுள்ளார். ஓனரும் அங்கே அழைத்து சென்றுள்ளார்.. அங்கு போனதுமே, நிர்வாண சாமியார் ஓனரின் தலையில் கை வைத்து மறுபடியும் ஆசீர்வாதம் செய்துள்ளார்..
பிறகு, சாமியார், என் கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் சொல்லி, ஓனரிடம் கேட்க சொல்லி உள்ளார்.. இதை கேட்டதுமே ஓனர் உட்பட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இருந்தாலும், ஒரு பவுன் மதிப்பிலான தங்க செயினை நிர்வாண சாமியாரிடம் கொடுப்பதற்காக எடுத்துள்ளார்.. அந்த செயினை பார்த்த சாமியார், அந்த செயின் வேண்டாம், இன்னும் பெரிசா செயின் எடுங்கள் என்று கூறியதுடன், பெரிய செயின் ஒன்றை சுட்டிக்காட்டி உள்ளார்.

கஸ்டமர்: ஆனால் ஓனரோ, “அந்த செயினுக்கு, ஏற்கனவே ஒரு கஸ்டமர் ஆர்டர் தந்திருக்கிறார். அதனால், இதையே அன்பளிப்பாக வைத்து கொள்ளுங்கள் என்று கூறி, அந்த ஒரு பவுன் சங்கிலியை, நிர்வாண சாமியாரின் கழுத்தில் அணிந்திருக்கிறார்.. அதற்கு பிறகு அந்த சாமியார் கிளம்பி போய்விட்டாராம்.. இந்த சம்பவம்தான் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நிர்வாண சாமியார் காசு, பணத்தை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறார்? அவர் நிஜமாகவே எங்கிருந்து வந்தார்? எங்கே போகிறார்? எதுவுமே தெரியவில்லை. நிர்வாணமாக இப்படி திரிபவர்களை அகோரிகள் என்பார்கள்.
திடீரென்று நகைக்கடைக்கு நுழைந்ததுடன், தன்னை காண திரண்டு வந்த பொதுமக்களுக்கும் ஆசி என்ற பெயரில் விபூதி “அடித்துவிட்டு” போயிருக்கிறார்.. அத்துடன், கை நிறைய பணம் + கழுத்தில் செயினுடனும் கிளம்பி போயிருக்கிறார் “முற்றும் துறந்த” அந்த நிர்வாண சாமியார்..!!