கேரளாவை மீண்டும் மிரட்டும் மூளை திண்ணும் அமீபா… 15 வயது சிறுவன் பலி.. பீதியில் உறைந்த மக்கள்!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகிலுள்ள பனவல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் அசுத்தமான நீரில் வாழும் அமீபவால் ஏற்படும் என கூறப்படுகிறது. அசுத்தமான நீரை பயன்படுத்தும் போது மூக்கு வழியாக உடம்புக்குள் செல்லும் இந்த அமீதா மூளை தொற்று நோய்யை உருவாக்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மூளையை செயலிழக்க செய்யும் இந்த அமீபா விரைவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் இந்த அரிய தொற்றால் பாதிக்கப்பட்ட 15 வயதுசிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரான வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். இதற்கு முன்பு கேரள மாநிலத்தில் இதுபோன்ற அரிய மூளை தொற்றால் 5 பேர் பாதிக்கப்பட்டதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவுக்கு இன்னைக்கு கடைசி நாள்… தமிழ்நாட்டுல நாளையிலேருந்து… சூப்பர் தகவல் சொன்ன வெதர்மேன்!

முதலில் 2016 ஆம் ஆண்டு ஆலப்புழா திருமலை வார்டில் இந்த மூளை தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். பின்னர் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மலப்புரத்தில் இரண்டு பேர் இந்த மூளையை திண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டதாகவும், 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோடு மற்றும் திருச்சூரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு போன்றவை இந்த அமீபா தொற்றின் முக்கிய அறிகுறிகள் என்று கூறியுள்ள அமைச்சர் வீணா ஜார்ஜ், இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் மரணத்தை தழுவியதாக தெரிவத்துள்ளார். மேலும் அரிதான இந்த மூளை நோய்த்தொற்றுக்கான இறப்பு விகிதம் 100 சதவீதம் என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

டிஐஜி விஜயகுமாரை தற்கொலைக்கு தூண்டியது யார்? போன் ஆய்வு செய்யப்பட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

நோய்த்தொற்றை ஏற்படுத்தும் இந்த அமீபாக்கள் தேங்கியிருக்கும் நீரில் காணப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார். நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இந்த மூளை திண்ணும் அமீபாவால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் கேரளாவில் 15 வயது சிறுவன் ஒருவன் பலியாகியிருப்பது மக்களை பீதியடைய செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.