சாட்டையை சுழற்றிய சிவ்தாஸ் மீனா.. மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மொத்தமா மாறிடுச்சே..

சென்னை:
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக பதவியேற்ற ஒரு வாரத்திலேயே ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார் சிவ்தாஸ் மீனா. தான் தலைமைச் செயலாராக பொறுப்பேற்ற அடுத்த நாளே பல ஐஏஎஸ் அதிகாரிகளை சிவ்தாஸ் மீனா பணியிடமாற்றம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது மீண்டும் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி உத்தரவு பிறப்பித்துளளார். எந்தெந்த ஐஏஎஸ் அதிகாரிகள், எந்தெந்த துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்.

ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆணையராக பதவி வகித்து வந்த டாரேஸ் அகமது ஐஏஎஸ், தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் இதுவரை மேற்குறிப்பிட்ட துறையை கூடுதலாக கவனித்து வந்தார். டாரேஸ் அகமது சமூக பாதுகாப்பு திட்டத் துறை ஆணையர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார்.

சமூக பாதுகாப்புத் திட்டத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த என். வெங்கடாச்சலம் ஐஏஎஸ், நில மறுசீரமைப்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த துறையை எஸ். நாகராஜன் ஐஏஎஸ் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

தமிழ்நாடு உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல் துறை நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த சிவஞானம் ஐஏஎஸ், பொதுத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த துறையை கலையரசி ஐஏஎஸ் கவனித்து வந்தார்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளராக பதவி வகித்து வந்த கலையரசி ஐஏஎஸ், வருவாய் நிர்வாகத்துறையின் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த துறையை சிவராசு ஐஏஎஸ் கவனித்து வந்தார்.

தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் தலைவராக பதவி வகித்து வந்த மலர்விழி ஐஏஎஸ், நீர்வளத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த பதவியை ஆர். கண்ணன் ஐஏஎஸ் வகித்து வந்தார். அருங்காட்சியக ஆணையராக இருந்த ஏ. சுகந்தி ஐஏஎஸ், தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்ப்டடுள்ளார். முன்னதாக, கஜலட்சுமி ஐஏஎஸ் இந்தப் பதவியை கவனித்து வந்தார்.

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கத்துறை இயக்குநராக இருந்த ஜே.யு. சந்திரகலா ஐஏஎஸ், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த பதவியை அமுதவள்ளி ஐஏஎஸ் கவனித்து வந்தார்.

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் இயக்குநராக இருந்த அமுதவள்ளி ஐஏஎஸ், சமூக நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் ஒழுங்கு நடவடிக்கைகள் துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக இருந்த உமாசங்கர் ஐஏஎஸ், தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த பதவியை சந்திரகலா ஐஏஎஸ் கவனித்து வந்தார்.

நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் சில நாட்கள் விடுமுறையில் இருந்தார். தற்போது விடுமுறை முடிந்து திரும்பிய அவர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக இந்த பதவியில் இருந்த லில்லி ஐஏஎஸ் தற்போது விடுமுறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் துறை செயல் இயக்குநராக இருந்த சிம்ரன்ஜித் சிங் காஹ்லான், நகராட்சி நிர்வாகத்துறை துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையராக இருந்த ஜெயக்காந்தன் ஐஏஎஸ், ஊரக வளர்ச்சி மேம்பாட்டுத் துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் முதன்மை செயலாக்க அதிகாரியாக இருந்த ஜே.இ. பத்மஜா ஐஏஎஸ், பொதுப்பணித்துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.