சாலையில் சென்றவருக்காக திடீரென காரை நிறுத்திய ஜெயக்குமார்… நடந்தது என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் சபாநாயகர், மீன்வளத்துறை அமைச்சர், நிதியமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அமைச்சராக இருந்த போதே பாட்டுப்பாடுவது, நடனம் ஆடுவது, கிரிக்கெட் விளையாடுவது என பணியை தாண்டி ஜாலி பர்சனாக வலம் வந்தவர்.

அதேநேரத்தில் அரசியல் ரீதியாக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது, அவர்களை விமர்சிப்பது, உட்கட்சி பூசல்கள் குறித்தும் உடனுக்குடன் பதில் அளித்து அடிக்கடி டைம் லைனில் இடம் பிடித்த வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள அமைச்சர் ஜெயக்குமார் எதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்ளக்கூடிய நபர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தஞ்சாவூர் சென்றார். அப்போது புதுச்சேரி போக்குவரத்து சிக்னலில் கையில் பொருட்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியிடம் தனது காரை நிறுத்தி பொருட்களை வாங்கியுள்ளார். அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஜெயக்குமார்.

மேலும் அந்த வீடியோவுக்கு தஞ்சாவூர் நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போது பாண்டிச்சேரி போக்குவரத்து சிக்னலில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனம் தளராது பேனா போன்ற சிறிய பொருட்களை சாலையில் செல்பவர்களிடம் விற்று கொண்டிருந்தார்.தன் நிலையை எண்ணி முடங்கி விடாமல் முயற்சி செய்யும் அவரது மன தைரியத்திற்கு எதுவும் ஈடு இணையற்றது! உழைக்கும் கரங்களுக்கு உதவிடுவோம்! என பதிவிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.