பதவியை ராஜினாமா செய்த நெதர்லாந்து பிரதமர் | 24 வயது இளைஞருக்கு 90 ஆயுள் தண்டனைகள் – உலகச் செய்திகள்

வெஸ்ட் பாங்க் பகுதியில் நடந்த தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின்போது இந்த சம்பவம் நடந்தேறியது.

ஸ்வீடனில் குரான் எரிப்பு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.’ குரானின் புனிதத்தைக் காப்போம்’ என்று கூறி அந்நாட்டுப் பிரதமர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

‘Threads’ என்ற மெட்டாவின் புதிய செயலிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அச்சுறுத்தியிருக்கிறது. ட்விட்டரின் வணிக ரகசியங்களைச் சட்டவிரோதமாக மெட்டா நிறுவனம் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியிருக்கிறது ட்விட்டர்.

செக் நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியல்லா (Petr Fiala) உக்ரைனுக்கு புதிய ஆயுதங்களை வழங்கப்போவதாக அறிவித்தார். மேலும், உக்ரைன் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க உதவுவதாகவும் அறிவித்தார்.

பீஜிங் சென்ற அமெரிக்க கருவூலர் செயலாளர் ஜானட் எலன், சீனாவின் Premier Li Keqian அவர்களைச் சந்தித்தார். ஆரோக்கியமான வர்த்தக போட்டியை விரும்புவதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வால்மார்ட்டில் 2019-ல் இனவெறியினால் பயங்கரத் துப்பாக்கிச்சூடு நடத்திய 24 வயது பாட்ரிக் க்ரூசியஸிற்கு (Patrick Crusius) 90 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 23 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்றபோதுடைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததை அடுத்து, ஓஷன்கேட் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தியது.

குடியேற்றக் கொள்கை தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாததையடுத்து நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே ராஜினாமா செய்திருக்கிறார்.

க்ரைம்

ஜெர்மனியில் ஐ.எஸ் குழுவால் ஈர்க்கப்பட்டு, பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரை ஜெர்மனி காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

பேஸ்பால் மட்டையால் ஆசிரியரை அடித்துக் கொன்றதற்காக அமெரிக்க இளைஞனுக்கு 25 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Willard Miller என்ற சிறுவன்,2021-ம் ஆண்டில் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யாததால் ஆசிரியரைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யப் போரினால் உக்ரைனில் 500 குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.