சென்னை: கேரி பி ஹெச் இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா நடித்த ஸ்பை திரைப்படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது.
இந்த படத்தில் ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை ஐஸ்வர்யா மேனன் வாங்கி சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்பை திரைப்படம்: கேரி பி ஹெச் இயக்கியுள்ள இந்தப் படத்தை இடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கே.ராஜசேகர ரெட்டி தயாரித்துள்ளார். ஸ்ரீ சரண் பகாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் ஜூன் 29-ம் தேதி திரையரங்கில் வெளியானது.
ரா பிரிவு உளவாளி: இந்திய உளவுப்பிரிவான ராவைச் சேர்ந்த சுபாஷ் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யன் ராஜேஷ் நடித்துள்ளார். இவர், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி காதிர் என்பவரைக் கொல்லச் செல்லும் போது அவர் மரணத்தை தழுவுகிறார். ஆனால், நடந்தது என்னவென்ற விவரம் ரா அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.
படத்தின் கதை: இதையடுத்து, இறந்ததாக கருதப்பட்ட காதிர் 5 ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் பயங்கர தாக்குதலை செய்ய திட்டமிடுவதை தெரிய வர. காதிர் குறித்து உண்மையை கண்டுபிடிக்க ஜெய் (நிகில் சித்தார்த்) தலைமையிலான ரா அதிகாரிகள் குழு ஜோர்டானுக்கு செல்கிறது. இறந்து போனதாக கருதப்பட்ட சுபாஷின் சகோதரர் தான் இந்த ஜெய்.

மாறு கிளைமாக்ஸ்: இந்த நேரத்தில் சுபாஷ் சந்திரபோஸ் சம்பந்தப்பட்ட ரகசிய பைல் ஒன்று காணாமல் போய்விடுகிறது ,அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்கும் வேட்கையோடு திரிகிறார் ஜெய். ரகசிய கோப்பு பைலை எடுத்தது யார், அண்ணன் மரணத்தில் மறைந்து இருக்கும்ம மர்மம் என்ன போன்ற பல கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் காட்சி விருந்தாக அமைந்துள்ளது.
சம்பளம் எவ்வளவு தெரியுமா: இந்த படத்தில் அழகுப்பதுமையாக நடிகை ஐஸ்வர்யா மேனன், பிளாஷ் பேக் காட்சியில் வந்து செல்கிறார். வழக்கத்தை விட இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் மிகவும் அழகாக இருக்கிறார். இந்த படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா மேனன் ரூ.70 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.