வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டார் எஸ் சலாம்,-தான்சானியாவில் உள்ள இந்திய கலாசார மையத்தில், சுவாமி விவேகானந்தரின் மார்பளவு சிலையை, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
![]() |
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவுக்கு, அரசு முறை பயணமாக வந்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், டார் எஸ் சலாம் நகரில் உள்ள இந்திய கலாசார மையத்தில், விவேகானந்தரின் மார்பளவு சிலையை, நேற்று திறந்து வைத்தார்.
![]() |
அப்போது, அவர் பேசியதாவது:
எக்காலத்திற்கும் பொருந்தும், விவேகானந்தரின் போதனைகளுக்கு இந்த சிலை சாட்சியாக இருக்கும்.
இது, நம் வரலாற்றில் நம்பிக்கை, தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தான்சானியாவில் இந்திய கலாசாரம் பிரபலப்படுத்துவது போல், இந்தியாவிலும், அந்நாட்டின் கலாசாரம் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.
உலக நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படுவதற்கு, விவேகானந்தரின் பொன்மொழிகள் உத்வேகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement