வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு : பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு விசாரணைக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலின் போது பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, விஜயநகர மாவட்டத்தின் ஹாரப்பன்னாஹள்ளி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., தோல்வியை தழுவினால், ‘மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை வாக்காளர்கள் இழக்க நேரிடும்’ என்றார்.
![]() |
மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் திட்டங்களை முடக்கும் என்றும் குற்றம்சாட்டினார். இவரது பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாக கூறி, தேர்தல் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நட்டா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், நட்டா மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கை விசாரிக்க இடைக்கால தடைவிதித்துஉத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement