தலைநகர் டில்லியில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை இரண்டு நாட்கள் முன்னதாகவே, ஜூன் 25ல் துவங்கியது. லேசான மழை பெய்து வந்த நிலையில், டில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில், இந்தப் பருவமழைக் காலத்தின் முதல் கனமழை நேற்று கொட்டியது.
இன்றும் வெளுத்துக் கட்டும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று மதியம் 2:30 மணி வரை 98.7 மி.மீ., மழை கொட்டித் தீர்த்ததாக சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கனமழையால் புதுடில்லி வெள்ளத்தில் மிதக்கிறது. மின்டோ பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திலகர் பாலத்தின் கீழ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநகர் முழுதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதில் சிக்கித் தவித்த மக்கள், சமூக வலைதளங்களில் தங்கள் துயரங்களை பதிவு செய்து வருகின்றனர்.
லட்சுமி நகர் முதல் ஐ.டி.ஓ., வரை சாலையில் இடுப்பளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நேற்று பெய்த கனமழை டில்லியை ஏரியாக மாற்றி விட்டதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டில்லி மாநகராட்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’மதியம் 12:00 – 2:30மணி வரை தீவிர மழை பெய்தது. எனவே, மழைநீர் வடிகால்களும் நிரம்பி விட்டன.
அதனாலேயே சாலைகளில் வெள்ளம் தேங்கியது. ஊழியர்கள் இடைவிடாது பணியில் ஈடுபட்டுள்ளனர்’என கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement