சென்னை: நடிகை பார்வதி நாயரின் கவர்ச்சி போட்டோவை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.
அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார்.
அடுத்ததாக பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர்.
அடுத்தடுத்த படங்களில்: அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.

உன்பார்வையில்: பார்வதி நாயர் நீண்ட தேடலுக்கு பின் நடிப்புக்கு சவால் தரும் வகையில் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சகோதரியினை கொலை செய்யும் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.
திகில் திரைப்படம்: காதலும், திகிலும் கலந்த ‘உன் பார்வையில்’ என்ற படத்தில், கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கிறார். கஹானோ பியார் ஹை, பர்தேஷ், தாள் போன்ற பாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபீர்லால், இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராம் மனோதத்துவ நிபுணராக நடித்துள்ளார்.

குவியும் லைக்குகள்: இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், இயக்குனர்களை கவரும் வகையில் தொடர்ந்து கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஓவர் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை பார்வதி வெளியிட்டுள்ளார். இணையத்தை ஆக்கிரமித்துள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை மலை போல் குவித்து வருகிறது.