சென்னை: நடிகர் சூரி பிரபல காமெடி நடிகராக நீண்ட காலங்களாக தமிழ் சினிமாவில் நிலை கொண்டுள்ளார். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
வெண்ணிலா கபடிக்குழு படம் இவருக்கு சிறப்பான அடையாளத்தை கொடுத்தது. முன்னதாக சில படங்களில் தலைகாட்டியுள்ளார் சூரி.
டைமிங் காமெடி இவரது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஹீரோவாக மாறியுள்ளார் சூரி.
நடிகர் சூரியின் லேட்டஸ்ட் புகைப்படம்: நடிகர் சூரி தன்னுடைய 20வது வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். தான் சினிமா ஆசையில் நடிக்கவில்லை என்றும் வறுமை காரணமாகவே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து, வாய்ப்புகளை பெற்றதாகவும் அவர் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். இவரது முதல் படம் காதலுக்கு மரியாதை. இந்தப் படத்தில் கூட்டத்தில் ஒருவராகத்தான் நடித்திருந்தார். இற்தப் படம் 1997ம் ஆண்டில் வெளியான நிலையில், தொடர்ந்து இதுபோன்று கூட்டத்தில் ஒருவராகவே சூரியின் கேரக்டர்கள் அமைந்தன.
தொடர்ந்து சங்கமம், மறுமலர்ச்சி என அடுத்தடுத்த படங்களில் இதேபோன்ற கேரக்டர்களில் நடித்துவந்த சூரிக்கு சிறப்பான கவனிப்பை கொடுத்தப்படம் என்றால் அது வெண்ணிலா கபடிக்குழுதான். இந்தப் படத்தில் இவரது பரோட்டா காமெடி ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்தது. இந்தப் படத்தில் காமெடி மட்டுமில்லாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் கலக்கியிருப்பார் சூரி. இந்தப் படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார் சூரி.
சினிமாவில் சூரியின் முக்கியமான நண்பர்கள் என்றால் சிவகார்த்திகேயன் மற்றும் விஷாலை கைக்காட்டலாம். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட். விஜய்யுடன் அடுத்தடுத்து நடித்த வேலாயுதம் மற்றும் ஜில்லா படங்கள் சூரிக்கு மிகவும் சிறப்பாக அமைந்தன. சிறப்பான அடையாளத்தை கொடுத்தன. தொடர்ந்து ரஜினியுடனும் அண்ணாத்த படத்தில் நடித்து பெயர் பெற்றார் சூரி.

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன், சூரிக்குள் இருக்கும் ஹீரோவை கண்டுபிடித்து தன்னுடைய விடுதலை படத்தில் அவரை ஹீரோவாக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படம் சூரிக்கு ஹீரோவாக சிறப்பான அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படமும் சூரியை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காமெரி நடிகராக இருந்தாலும் தன்னுடைய உடலின் பிட்னசை மிகவும் சிறப்பாக பராமரித்து வருகிறார் சூரி. சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார். தன்னுடைய புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது காரில் இருந்தபடி சூரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. கூலர்சுடன் அவர் இந்தப் புகைப்படங்களில் காணப்படுகிறார்.