சென்னை: ஜெயிலர் படத்தில் தமன்னா தாறுமாறாக ஆடிய “காவாலா” பாடல் தான் இறங்கி வந்த அண்ணனையே ஓரமா உட்கார வைத்து இன்ஸ்டாகிராமில் செம வைப் மெட்டீரியலாக மாறி உள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் ரஜினிகாந்தின் ஜெயிலருக்கு இப்படியொரு பாட்டுப் போட்டுள்ளாரே என விஜய் ரசிகர்கள் செம காண்டில் உள்ள நிலையில், அவர்களை மேலும், கடுப்பாக தொடர்ந்து ஏகப்பட்ட நடிகைகள், சின்னத்திரை நடிகைகள், குட்டி வாண்டுகள் முதல் வயதானவர்கள் வரை அந்த பாட்டுக்கு வைப் பண்ணி வருகின்றனர்.
இந்நிலையில், பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை சாய் பிரியங்கா ரூத் அந்த பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
நா ரெடியை ஓரங்கட்டிய காவாலா: ரஜினிகாந்த், தமன்னா ஆட்டம் போட்ட ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான காவாலா பாடல் வெளியாகி 2 நாட்களில் 16 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்து டிரெண்டாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் அதிக ரீல்கள் போடப்பட்ட பாடல்களில் சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ பட பாடலான “நா ரெடி” பாடலை 2 நாட்களிலேயே “காவாலா” பாடல் ஓரங்கட்டி விட்டது என்கின்றனர்.

வயித்தெரிச்சல் ட்ரோல்கள்: 70 பிளஸ் வயதில் ரஜினிக்கு இப்படியொரு ஐட்டம் சாங் தேவையா என வயித்தெரிச்சல் ட்ரோல்களும் அதிகம் வலம் வருகின்றன. சமந்தாவின் ஓ சொல்றியா மாமா, விஜய்யின் ரஞ்சிதமே பாடல்களை விட இந்த படம் தரமா இருக்கு என்றும் தமன்னாவின் ஹாட் டான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என ரஜினி ரசிகர்கள் ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மேலும், ட்ரோல்களை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு ஏகப்பட்ட செலிபிரிட்டிகளே “காவாலா” பாட்டுக்கு கண்டபடி டான்ஸ் ஆடி ரீல்களை போட்டு வருகின்றனர்.

இரவின் நிழல் நடிகை குத்தாட்டம்: மெட்ரோ, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் மற்றும் பார்த்திபன் இயக்கி நடித்த சிங்கிள் ஷாட் திரைப்படம் இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை சாய் பிரியங்கா ரூத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பாடலை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஏகப்பட்ட ஹார்ட்டின்களை விட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக காதல் தோல்வியில் அவதிப்பட்டு வந்தவர் போல வீடியோக்களை பதிவிட்டு வந்த சாய் பிரியங்கா ரூத்தையே இந்த பாடல் குத்தாட்டம் போட வைத்துள்ளதே என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
லோ பட்ஜெட் தமன்னா: சாய் பிரியங்கா ருத்தின் காவாலா டான்ஸை பார்த்த நெட்டிசன்கள், “தயவு செய்து அந்த பாட்டை கொல்ல வேண்டாம் என்றும் லோ பட்ஜெட் தமன்னா என்றும் பங்கமாக கமெண்ட்டுகளை போட்டு சாய் பிரியங்காவை கலாய்த்து வருகின்றனர்.