எலோன் மஸ்க் ட்விட்டரைப் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். வருவாயை அதிகரிப்பதற்கான மஸ்க்கின் இந்த மாற்றங்களில் சில யூசர்களுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியது. உதாரணமாக, ப்ளூ டிக் இல்லாத யூசர்கள் டிவிட்டர் கன்டென்டுகளை பார்ப்பவதற்கான வரம்பு நிர்ணயம் மற்றும் உலாவல் அணுகல் தடுப்பு ஆகியவை எதிர்ப்பை உருவாக்கியது. AI ஸ்டார்ட்அப்களால் டேட்டா ஸ்கிராப்பிங்கை எதிர்த்துப் போராட இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக மஸ்க் தெரிவித்தார்
மஸ்கின் இந்தக் கொள்கை மாற்றங்கள் முறையாகத் திட்டமிடப்படாமல் அமல்படுத்தப்பட்டது. இதே மாதிரியான இன்னும் சில முடிவுகளும் அப்படியே அமல்படுத்தப்பட்டன. அவற்றில் சில முடிவுகள் ஒரே இரவில் திரும்பப் பெறப்பட்டன. சில பல திருத்தங்கள் மூலம் புழகத்தில் உள்ளது. இது ட்விட்டர் பயனாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் விரக்தியையும் ஏற்படுத்திய நிலையில், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பல நிறுவனங்கள் களத்தில் குதித்தன. இந்த நேரத்தில் தான் சீனில் நுழைந்தார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்.
மஸ்கின் டிவிட்டருக்குப் போட்டியாக மார்க் ஜூக்கர்பெர்க்கின் Meta நிறுவனம் Threads- தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தளம் தொடங்கப்பட்ட 18 மணி நேரத்திற்குள் 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றது. புதிய பிளாட்ஃபார்மை முயற்சிக்கவும், அதில் புதியது என்ன வழங்குகிறது என்பதைப் பார்க்கவும் பலர் த்ரெட்களில் இணைய தொடங்கினர்.
அதில் நீங்களும் ஒருவராக இருந்து, த்ரெட் கணக்கை முயற்சி செய்ய அக்கவுண்ட் ஓபன் செய்திருந்தால் உங்கள் கணக்கை நீக்குவது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். தற்போது, நீங்கள் த்ரெட்களுக்காகப் பதிவுசெய்யப் பயன்படுத்திய Instagram கணக்கை நீக்காமல் உங்கள் Threads கணக்கை நீக்க முடியாது. Instagram உதவி மையத்தில் உள்ள Threads தனியுரிமைக் கொள்கையின்படி, “நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் Threads சுயவிவரத்தை செயலிழக்கச் செய்யலாம். ஆனால் உங்கள் Instagram கணக்கை நீக்குவதன் மூலம் மட்டுமே உங்கள் Threads சுயவிவரத்தை நீக்க முடியும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் உங்கள் Instagram கணக்கை நீக்க நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் Threads கணக்கை செயலிழக்கச் செய்யலாம். இது உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறதா?. த்ரெட்ஸ் கணக்கை எப்படி நீக்குவது? என்பது குறித்த படிப்படியான வழிகாட்டி இங்கே உள்ளது.
இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை நீக்காமல் த்ரெட்ஸ் கணக்கை எப்படி நீக்குவது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
* த்ரெட்ஸ் பயன்பாட்டைத் திறந்து கீழ் வலது மூலையில் உள்ள உங்கள் புரொபைல் ஐகானைத் கிளிக் செய்யவும்.
* மேல் வலது மூலையில் உள்ள மெனு ஐகானைத் கிளிக் செய்யவும்.
* அதில் கணக்கு என்பதைத் கிளிக் செய்து , புரொபைலை செயலிழக்கச் செய்யவும்.
* டிஆக்டிவேட் த்ரெட்ஸ் சுயவிவரத்தை தட்டி உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தவும்.