சென்னை: தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் எல்.ஜி.எம் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கருப்பு நிறசூட் கோட்டில் சும்மா மிரட்டலாக இருந்தார் தல தோனி
எல்.ஜி.எம் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக லவ் டுடே புகழ் இவானா நடித்து உள்ளார்.
மேலும், நதியா, பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ஆர்.ஜே.விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார்.
எல்.ஜி.எம்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள இத்திரைப்படம், படம் ஒரு யூத்ஃபுல் ரொமாண்டிக் என்டர்டெய் திரைப்படமாக உருவாகி உள்ளது. காதலிக்கும், அம்மாவுக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளைஞராக ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிறப்பான வரவேற்பு: தோனி என்டர்டைன்மென்ட் என்கிற நிறுவனத்தின் மூலம் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் ஆகியோர் இணைந்து தங்களது முதல் தமிழ் படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோலாகல விழா: இந்த விழாவில் நடிகை இவனா, நதியா, ஹரீஷ் கல்யாண்,யோகி பாபு, சாண்டி மாஸ்டர், பாடகர் ஆண்டனி தாஸ் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர் ‘Kiliki’ பாடலுக்கு நடனமாடினார். அதேபோல பாடகர் ஆண்டனி தாஸ் காட்டுபயபுள்ள பாடலை அட்டகாசமாக பாடினார்.
விஜய்கே டஃப் கொடுப்பாரு போல: கோலாகலமாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நம்ம தல தோனி பிளாக் அண்ட் பிளாக்கில் அட்டகாசமாக வந்திருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இதே லீலா பேலசில் தான் நடந்தது. அந்த விழாவிற்கு விஜய் பிளாக் அண்ட் பிளாக்கில் வந்து அசத்தினார். அதே போல எல்.ஜி.எம் பட இசை வெளியீட்டு விழாவிற்கு தல தோனி பிளாக் சூட் கோட்டில் அசத்தினார். இதைப்பார்த்த ரசிகர்கள் போறபோக்க பாத்தா விஜய்கே டஃப் கொடுப்பாரு போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.