‘லியோ’ படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளின் ஷுட்டிங் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள லியோலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘லியோ’. கோலிவுட் சினிமாவே எக்கச்சக்கமாக இந்தப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அத்துடன் வசூலிலும் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப்படம் வசூல் சாதனை நிகழ்த்தும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ‘லியோ’ குறித்து அதிரடியான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இரண்டாவது முறையாக இணைந்த கூட்டணிதமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகர்களே காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ், விஜய் இருவரும் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளனர். ‘மாஸ்டர்’ பாடல் போல் இல்லாமல் தற்போது விஜய்யுடன் இணைந்துள்ள படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
சர்ச்சையில் சிக்கிய நா ரெடிஅண்மையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பாடிய ‘நா ரெடி’ பாடல் வெளியானது. அனிருத் இசையில் வெளியாகியுள்ள இந்தப்பாடலுக்கு தொடர்ச்சியாக வைப் செய்து வருகின்றனர் ரசிகர்கள். அதே நேரம் இந்தப்பாடல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. விஜய் பாடல் முழுக்க சிகரெட் பிடிப்பதை போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டி வருகிறது ‘நா ரெடி’ பாடல்.
லோகேஷ் கனகராஜின் ட்வீட்இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்த சூப்பரான அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்தப்படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்துள்ளாராம் விஜய். இதற்காக விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா’ என பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
விஜய்யுடன் இணைந்த வெங்கட் பிரபுசெவன் ஸ்கிரீன் தயாரித்துள்ள ‘லியோ’ படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து திரிஷா நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். லியோவை தொடர்ந்து விஜய்யின் ‘தளபதி 68’ படத்தினை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.