தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது. இது கிண்டியில் CEG, ACT, SAP மற்றும் குரோம்பேட்டையில் MIT ஆகிய கல்லூரிகளையும் கொண்டிருக்கிறது. இதன்கீழ் மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடுஉயர்கல்வி சேவை மட்டுமின்றி சமூக நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 400 விவசாயிகளுக்கு ட்ரோன்களை இயக்கும் பயிற்சியை அளிக்கவுள்ளது. இதற்கான பயிற்சி குரோம்பேட்டை MIT-ல் உள்ள ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி ரிமோட் பைலட் பயிற்சி மையத்தில் வழங்கப்படும்.ட்ரோன் பைலட் பயிற்சிமொத்தம் 2 வாரங்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஏற்பாடுகள் அடுத்த சில வாரங்களில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 மணி நேர பயிற்சிக்கு பின்னர், வயல்களில் சோதனை முறையில் விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவர். அங்கு போதிய அனுபவம் பெற்றதும் சான்றிதழ் வழங்கப்படும்.
விவசாயத் துறையில் ட்ரோன்கள்விவசாய துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மண்ணின் தரத்தை மேம்படுத்தி அதிகப்படியான விளைச்சலை உண்டாக்கி சுற்றுச்சூழலுக்கு மாசற்ற வகையில் செயல்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ட்ரோன்களின் பயன்பாடு விவசாயத் துறையில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ட்ரோன்களின் பயன்பாடுவயல்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கவும், உரம் போடவும் பெரிதும் பயனளிக்கிறது. ட்ரோன்கள் மூலம் ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்க 600 முதல் 700 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. அதுமட்டுமின்றி விளைபொருட்களை உடனடியாக சந்தைக்கு எடுத்து செல்லவும் ட்ரோன்கள் உதவுகின்றன. மேலும் மழை, வெள்ள பாதிப்புகளின் போது பயிர்களை சேதத்தை குறைக்கவும் பயன்படுகின்றன.
ஒரு லட்சம் ட்ரோன் பைலட்கள் தேவைஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ட்ரோன் பைலட்கள் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழலில் 5,000 ட்ரோன் பைலட்கள் மட்டுமே போதிய பயிற்சி உடன் இருக்கின்றனர். எனவே இதற்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
விவசாயிகளுக்கு இலவசம்18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட யாராக இருந்தாலும் ட்ரோன் பைலட் சான்றிதழை பெற முடியும். இந்த சூழலில் ட்ரோன்களை இயக்கும் வகையில் பயிற்சி பெற்று உரிய சான்றிதழ் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ட்ரோன், மூன்று சக்கர வாகனம் மற்றும் உபகரணங்களை இந்திய விவசாய உர கூட்டுறவு அமைப்பு (IFFCO) இலவசமாக வழங்குகிறது.2,500 ட்ரோன்களுக்கு ஆர்டர்இந்த அமைப்பு விவசாய தேவைகளுக்காக 2,500 ட்ரோன்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது. உலகிலேயே இவ்வளவு ட்ரோன்கள் ஒரே நேரத்தில் வாங்கப்பட்டதில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த ட்ரோன்கள் கிராமப்புறங்களை சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் போதிய பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
செலவு 300 ரூபாய் தான்அதுவும் பவர் ஸ்ப்ரேயர்கள் உடன் ட்ரோன்களை வழங்க ஆலோசித்து வருகின்றனர். இதன்மூலம் ஒரு ஏக்கருக்கான செலவு என்பது வெறும் 300 ரூபாய் மட்டுமே. ட்ரோன்களில் பல வகை உண்டு. அதில் சிறிய மற்றும் நடுத்தர வகையை சேர்ந்த ட்ரோன்கள் தான் விவசாய தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.