அதிக வருமானம் ஈட்டக் கூடிய விவசாய உற்பத்திகளை இளம் விவசாய முயற்சியாண்மை கிராமங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எமது இலக்கு

அதிக வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய விவசாய உற்பத்திகளை இளம் விவசாய தொழில் முயற்சியாண்மைக் கிராமங்களுக்கு அறிமுகப்படுத்துவதே தமது நோக்கம் என்பதுடன் அங்கு புதிய விவசாய தொழில்நுட்பம், உபகரணங்கள், அதிக அறுவடை கிடைக்கக் கூடிய விதை வகைகள் என இதற்கு அவசியமான சகல வசதிகளையும் வழங்குவதாகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ரன்ன பிரதேசத்தில் கஹந்தாவை மற்றும் வாடிகலை ஆகிய இரு கிராமங்கள் இளம் விவசாய தொழில் முயற்சியாண்மை கிராமங்களாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு வாதிகலை கிராமத்தின் அருகில் இடம்பெறும் சிறு குளத் திட்டத்தை புனரமைக்கும் செயற்பாடுகளை முதலில் ஆரம்பிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் கீழ் நான்கு குளங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதுடன் இதற்காக 15 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வாடிகலை கிராமம் முழுமையாக விவசாயக் கிராமம் என்பதுடன் ஆனால் இங்கு விவசாயிகளுக்கு அவசியமான நீர் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் இன்று வரை அபிவிருத்தி செய்யப்படவில்லை. ஆனால் மரக்கறி மற்றும் பழவகை உற்பத்தி மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதுடன் பொருளாதார மத்திய நிலையம் வடிகாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தினமும் புதிய மரக்கறி மற்றும் பலவகைகள் பாரியளவில் வாடிகாலையிலிருந்து கொழும்பிற்கு அனுப்பப்படுவதுடன் நெடுஞ்சாலைக்கு அண்மையில் அமைந்துள்ள கிராமம் என்பதனால் புதிய மரக்கறிகள் மற்றும் பழவகைகள் விரைவாகக் கொண்டு செல்வதற்கான வசதிகள் காணப்படுகின்றன.

இதன்போது விவசாய அமைச்சரினால் ஏனைய விவசாயிகளுக்கு அவசியமான விவசாய உபகரணங்களுக்கான சமூக நல நிகழ்வுகள் பல நடைபெற்றன.

இங்கு கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர;

விவசாய அமைச்சரினால் புதிய திட்டங்களாக இளம் விவசாய முயற்சியாண்மைக் கிராம நிகழ்ச்சி இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2018இல் நான் விவசாய அமைச்சராக இருந்த போது முதலாவது விவசாய முயற்சியாண்மை முன்மாதிரிக் கிராமம் பண்டாரவளை கஹந்தே வெலயில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அந்த ஊரில் விவசாயிகள் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் தமது விவசாயத்தை மேற்கொள்கின்றனர். மேலும் சர்வதேச மட்டத்திலும் இளம் விவசாய தொழில் முயற்சியாளர்கள் உருவாகியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏழு கிராமங்களில் இவ்வருடத்தில் விவசாய முயற்சியாண்மை கிராமமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. அதன் கீழ் 36 குளங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. தற்போது அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமது பிரதேச குளங்களில் முறையாக பணிகள் இடம்பெறுகின்றனவா என விவசாய அமைப்புக்கள் மேற்பார்வை செய்வது வரவேற்கத்தக்கது .

இந்தக் கிராமங்களில் உள்ள இளம் சமூகத்தினருக்கு நாம் முன்னுரிமையளிக்க வேண்டும். அதற்காகவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெளிவு படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.