வருமான வரித்துறையினர் மூன்றாவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு நெருக்காமனவர்களின் இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கைது சமயத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜிக்கு ஆளுநர் மூலம் எவ்வளவோ நெருக்கடிகள் வந்த போதும் முதல்வர் ஸ்டாலின் அவரது அமைச்சர் பதவியை பறிக்காமல் பாதுகாத்துள்ளார். இதனால் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை எப்படியாவது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தால் அவரை வைத்து செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கலாம் என திட்டமிட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அசோக் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்த சூழலில் செந்தி பாலாஜி சகோதரர் அசோக் உடன் நட்பு பாரட்டியவர்களை குறிவைத்து வருமான வரித்துறை இறங்கியுள்ளது.
வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
வருமான வரித்துறை மூன்றாவது முறையாக இன்று இது தொடர்பாக சோதனை நடத்துகிறது. ராயனூர் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கொங்கு மணி என்கிற சுப்பிரமணி வீடு,3 00 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய வீட்டின் இடத்தில் முன்னாள் உரிமையாளர் என்று கூறப்படும் சின்னாண்டான் கோவில் பகுதியில் உள்ள ராம விலாஸ் நூற்பாலை உரிமையாளர் ரமேஷ் பாபு அலுவலகம், கரூர்-கோவை சாலையில் உள்ள கார்த்திக் என்பவருக்கு சொந்தமான சக்தி மெஸ் உனவகம், மேலும் 2 நிதி நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்தின், மாயனூர் அருகே எழுதியாம்பட்டியில் உள்ள சங்கர் பார்ம்ஸ் பண்ணை வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான பாலவிநாயகர் கிரஷர் உரிமையாளர் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமாக கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் செயல்பட்டு வரும் அலுவலகத்திலும் தற்பொழுது சோதனை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.