உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னர் பாகிஸ்தான் அணி விளையாடும் ஒரேயொரு பயிற்சிப் போட்டியான இந்தப் போட்டி இன்றும் (11) நாளையும் (12) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ள பயிற்சிப்போட்டிக்கான குழாத்தின் தலைவராக கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், தேசிய அணி வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, ஓசத பெர்னாண்டோ மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேற்குறித்த அனுபவ வீரர்களுடன் அஹான் விக்ரமசிங்க, நிபுன் தனன்ஜய, நுவனிது பெர்னாண்டோ, லக்சித மானசிங்க, சசிக டுல்ஷான், கவீஷ அஞ்சுல மற்றும் அசங்க மனோஜ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்டுள்ள அணி வருமாறு:
நிரோஷன் டிக்வெல்ல, ஓசத பெர்னாண்டோ, சந்துன் வீரகொடி, கமிந்து மெண்டிஸ், அஹான் விக்ரமசிங்க, நிபுன் தனன்ஜய, நுவனிது பெர்னாண்டோ, லக்சித மானசிங்க, பிரவீன் ஜயவிக்ரம, சசிக டுல்ஷான், கவீஷ அஞ்சுல, மிலான் ரத்நாயக்க, அசங்க மனோஜ், மொஹமட் சிராஸ்