எந்த பக்கம் பாத்தாலும் காவாலா வைப்…விமானநிலையத்தில் ஆட்டம் போட்ட தமன்னா!

சென்னை: ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான காவாலா வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில், விமானநிலையில் தமன்னா காவாலா பாடலுக்கு க்யூட்டான ஆட்டம் போட்டுள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது.

இந்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.

ஆகஸ்ட் 10 ரிலீஸ்: ஜெயிலர் படத்தின் மூலம் எப்படியும் தன்னுடைய வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் நெல்சன் திலீப் குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவருமே உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர்.

actress tamanna bhatia dance for kaavaala song at airport

காவாலா வைப்: இந்தப் படத்தின் முதல் பாடலான காவாலா இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தமன்னா நடனமும், ரஜினியின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. தமன்னா தாறுமாறாக ஆடிய இப்பாடல் இணையத்தில் செம வைப் மெட்டீரியலாக மாறி உள்ளது.

actress tamanna bhatia dance for kaavaala song at airport

விமானநிலையத்தில் டான்ஸ்: இந்நிலையில், நடிகை தமன்னா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து ரசிகர் ஒருவர் தமன்னாவுடன் இணைந்து காவாலா பாடலுக்கு நடனம் ஆடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் காவாலா பாடலுக்கு ரசிகர்கர்கள் நடனமாடி வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.