கன்னியாகுமரி வந்த ரயிலில் கிளம்பிய புகை: அலறியடித்து இறங்கிய மக்கள்!

அசாமிலிருந்து கன்னியாகுமரி வந்து கொண்டிருந்த திப்ருகர் – கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ( Dibrugarh – Kanniyakumari Vivek Express) ரயில் ஒடிசா மாநிலத்தில் புகையை கக்கியுள்ளது. இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறியடித்து இறங்கினர்.

ஒடிசாவில் ஜூன் மாத தொடக்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்குப் பின்னர் பல இடங்களில் ரயில்கள் தடம் புரள்வதும், ரயில் பெட்டிகள் தீ பிடித்து எரிவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் ஒடிசாவில் பெரிய தீ விபத்திலிருந்து தப்பித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

இந்தியாவிலேயே மிகவும் நீளமான ரயில் சேவை என்பது கன்னியாகுமரி – திப்ருகர் ரயில் சேவை தான். 4189 கி.மீ நீளம் கொண்டது இந்த ரயில் சேவை. கன்னியாகுமரியிலிருந்து அசாமுக்கும், அசாமிலிருந்து கன்னியாகுமரிக்கும் இயக்கப்படும் இந்த ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

அசாமிலிருந்து கிளம்பிய இந்த ரயில் ஒடிசா மாநிலம் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில பெட்டிகளில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் ரயில் பயணிகள் அச்சத்தில் மூழ்கினர்.

துரைமுருகனுக்கு நோ சொன்ன ஸ்டாலின்: மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் திமுக!

ரயில் ஓட்டுநரும் சாதுர்யமாக செயல்பட்டு வண்டியை நிறுத்தினார். இதனால் பயணிகள் ரயிலிருந்து இறங்கினர்.

புகை சூழ்ந்ததற்கான காரணம் குறித்து பார்த்துள்ளனர். ரயிலின் பிரேக் பகுதியில் கோணிப் பை ஒன்று சிக்கியுள்ளது. ரயில் செல்லும் போது ஏற்பட்ட உராய்வில் புகை வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலை உடனடியாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறுகின்றனர். பின்னர் ரயில் வழக்கம் போல் கிளம்பிச் சென்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.