சென்னை: தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் சந்தித்தேன் என்று நடிகை மீரா ஜாஸ்மின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ரன் படத்தின் மூலம் அறிமுகமான மீரா ஜாஸ்மின் தனது வசீகரமான கண்களை உருட்டி உருட்டி ரசிகர்களை வசியப்படுத்தினார்.
முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.
மீரா ஜாஸ்மீன்: விஷாலுக்கு ஜோடியாக சண்டைக்கோழி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் அவர் க்யூட்டாகவும், அலப்பறை கொடுக்கும் பெண்ணாகவும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற தாவணிப் போட்ட தீபாவளி பாடல் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாகவே இருக்கிறது.
கணவரை பிரிந்தார்: விஜய் ,அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, துபாயை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின் 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார்.
ரீ என்ட்ரி: திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருந்தார் மீரா ஜாஸ்மின் தயாரிப்பாளர் ஒய் நாட் சஷிகாந்த் டெஸ்ட் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கின்றனர். 2014-ம் ஆண்டு வெளியான விஞ்ஞானி படத்தில் கடைசியாக மீரா நடித்திருந்தார். பின் மலையாளத்தில் நடித்தாலும் 9 வருடமாக தமிழ் சினிமாவுக்கு வரவில்லை. டெஸ்ட் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார்.
இதுதான் காரணம்: இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மீரா ஜாஸ்மின், இத்தனை ஆண்டுகள் நடிக்காமல் இருந்ததற்கான காரணத்தை மனம் விட்டு பேசி உள்ளார். அதில், சில ஆண்டுகாலம் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் என்னால், நடிப்பின் மீது கவனம் செலுத்த முடியாமல் போனது, இப்போது அனைத்தில் இருந்தும் மீண்டு வந்து இருக்கிறேன். இதனால் எனது பயணம் மீண்டும் ஆரம்பமாவது போல் இருக்கிறது. சோஷியல் மீடியாவில் மக்கள் எனக்கு தரும் ஆதரவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.