நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
விஜய் ஆலோசனைநடிகர் விஜய் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறார் என்ற பேச்சு தலைவா படம் வெளியாவதற்கு முன்பிருந்தே வருகிறது. தலைவா படம் வெளியான பிறகு விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுகள் அதிகரிக்க தொடங்கியது. சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்களில் கூட அரசியல் வாடை பலமாக வீசி வருகிறது.
ஊக்கத் தொகைஇந்நிலையில் சமீபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்த நடிகர் விஜய், அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். மேலும் பொன்னாடை போர்த்தியும், சான்றிதழ் வழங்கியும் கவுரப்படுத்தினார் நடிகர் விஜய். அதுமட்டுமின்றி மாணவர்களை நாளைய வாக்காளர்களே என அழைத்த விஜய், தங்களின் பெற்றோர் ஓட்டுக்கு பணம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பெரியார், அம்பேத்கேர், காமராஜர் குறித்து மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் விஜய் கூறியிருந்தார்.
அரசியலுக்கான முன்னோட்டம்விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் அரசியலில் அடி எடுத்து வைப்பதற்கான முன்னோட்டம்தான் இது என பலரும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் முன்னணி அரசியல் கட்சிகளை சேர்ந்த பலரும் விஜய் அரசியலுக்கு வருவது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் கூறி வந்தனர்.
நிர்வாகிகளுடன் சந்திப்புஇந்நிலையில் நடிகர் விஜய் இன்று பனையூரில் உள்ள தனது வீட்டில் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். காலை 9 மணி முதல் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதிவாரியாக உள்ள நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இந்தக்கூட்டத்தில் நடிகர் விஜய் தனது அரசியல் என்ட்ரி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் கூறப்படுகிறது.
ஆழம் பார்ப்பாரா?2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் நடிகர் விஜய் ஆழம் பார்ப்பாரா? அல்லது 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக நடிகர் விஜய் களம் காண்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் 2019ஆம் ஆண்டு நடைபெற்றப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தினார்.கமல் வழியில்இதில் சென்னை, கோவை உள்ளிட்ட எளைட் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது. இதையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நேரடியாக களம் கண்ட நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதேபோல் கமல் வழியை பின்பற்றும் வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் விஜய் ஆழம் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.