சென்னை: விஜய் டிவியின் முதன்மை தொடரான பாக்கியலட்சுமி தற்போது விறுவிறுப்பான எபிசோட்களால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கணவன் தன்னை கைவிட்டாலும் தன்னிடம் இருக்கும் சமையல் திறமையால் அதி விரைவிலேயே முன்னுக்கு வருகிறார் இந்தக் கதையின் நாயகி பாக்கியா.
அவரது ஒவ்வொரு செயலுக்கும் குடுமபத்தினர் ஒத்துழைப்பு அதிகமாக காணப்படுகிறது. ஆனால் அவரின் தன்னலமில்லாத செயல்பாடுகளே இதற்கு காரணமாக அமைகிறது.
பாக்கியாவின் அதிரடியால் முழி பிதுங்கும் கோபி: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராகவும் மொத்தத்தில் அர்பன் கேட்டகரியில் மற்ற சேனல்களின் சீரியல்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தும் சாதனை செய்து வருகிறது சேனலின் பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா மற்றும் அவர்களது நெருங்கிய சொந்தஙகள் என குறைவான கேரக்டர்களை கொண்டு, நினைவான எபிசோட்களை சீரியல் இயக்குநர் கொடுத்து வருகிறார்.

கதையில் தெளிவான நடைமுறையையும் அவர் பின்பற்றி வருகிறார். தொடரின் நாயகி பாக்கியாவின் அதீதமான அமைதியும் பொறுமையும் சில நேரங்களில் கேள்விக்குட்படுத்தப்பட்டாலும் நாளுக்கு நாள் இந்த சீரியலின் ரசிகர்கள் வட்டம் அதிகரித்துதான் வருகிறது. அந்த வகையில், இந்தத் தொடர் விரைவில் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சில தினங்களாகவே இந்தத் தொடர் பல்வேறு சம்பவங்களை விறுவிறுப்பாக கொடுத்து வருகிறது.
வீட்டு சண்டை ஒன்றில் தன்னுடைய மாமியார் என்றும் பார்க்காமல் ஒருமையில் திட்டுகிறார் கோபியின் இரண்டாவது மனைவி, இதை கேள்வி கேட்கும் பாக்கியாவை கோபி ஆத்திரத்துடன் பேசுகிறார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் பாக்கியா, தான் வீட்டை அவரிடம் இருந்து வாங்க மீதம் தர வேண்டிய 18 லட்சம் ரூபாயை ஒரு மாதத்தில் தருவதாகவும் அப்படி தந்தால், அந்த வீட்டை விட்டு அவர் குடுமபத்துடன் வெளியேற வேண்டும் என்றும் சவால் விடுகிறார்.

இந்த சவாலை ஏற்கும் கோபி, அவ்வப்போது அவரால் கொடுக்க முடியாது என்றும், அவ்வளவு பணத்தை கையில் வைத்திருந்தால் எண்ணக்கூட அவருக்கு தெரியாது என்றும் கேலி பேசுகிறார். இதையெல்லாம் பொறுமையுடன் சமாளிக்கும் பாக்கியா, பாண்டிச்சேரியில் பிரம்மாண்டமான திருமண ஆர்டர் ஒன்றை கையில் எடுத்து, மிகுந்த சிரமங்களுக்கிடையில் அதை வெற்றிகரமாக முடிக்கிறார். கணிசமான பணம் அவரது கையில் கிடைக்கிறது.
ஆனாலும் தன்னுடைய கணவனிடம் தான் விட்ட சவாலை முறியடிக்க இன்னும் 10 லட்சம் ரூபாய் தேவைப்பட, மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறார் பாக்கியா. இந்நிலையில், சிங்கக்குட்டிகளால் அவரது இரண்டு மகன்களும் கைக்கொடுக்கிறார்கள். மூத்த மகன் செழியன் மற்றும் இளைய மகன் எழில் என ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து பாக்கியாவை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். இன்னிலையில், சவாலின் இறுதி நாளில் பாக்கியாவை வம்பிழுக்கிறார் கோபி.

உண்மை தெரியாமல் தன்னிடம் மீண்டும் கால அவகாசம் கேட்டாலும் தான் கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறார் கோபி. தொடர்ந்து பாக்கியாவை அவமானப்படுத்துகிறார். அவர் பேசுவதையெல்லாம் பொறுமையாக கேட்கும் பாக்கியா, அவரிடம் 18 லட்சம் ரூபாயை கொடுக்கிறார். இதனால் கோபி மற்றும் ராதிகா இருவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். எப்படி ஒரு மாதத்தில் 18 லட்சம் புரட்ட முடியும் இது டூப்ளிகேட் நோட் என்று கோபி கூறுகிறார்.
தொடர்ந்து அவருக்கு வேண்டுமென்றால் செக் செய்துக் கொள்ளலாம். ஆனால் அவர் கூறியதை போல அந்த வீட்டிலிருந்து அவர் வெளியேற வேண்டும் என்று கூறுகிறார் பாக்கியா. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கோபி, அது தன்னுடைய பெற்றோர், மகன்கள் மற்றும் மகள் இருக்கும் வீடு என்றும் அந்த வீட்டை விட்டு தான் வெளியேற மாட்டேன் என்றும் கூறுகிறார். இதனால் ஆத்ததிரமடைகிறார் பாக்கியா. ஈஸ்வரியை, ராதிகா திட்டும்போதும் +2 தேர்வுக்கு படித்துவந்த இனியாவின் ரூமில் அவர் புகுந்துக் கொண்டபோதும் அது தன்னுடைய குடும்பம் என்பது தெரியவில்லையா என்று பாக்கியா கேள்வி எழுப்புவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.