Boris Johnson is the father of his 8th child at the age of 59 | 59-வது வயதில் 8-வது குழந்தைக்கு தந்தையாகிறார் போரிஸ் ஜான்சன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், 59 வது வயதில், 3வது மனைவி மூலம் 8 வது குழந்தைக்கு தந்தையானார்.

போரிஸ் ஜான்சனுக்கும், முன்னாள் மனைவியான மரினா வீலருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். பிறகு, காதலி ஹெலன் மூலம் மற்றொரு குழந்தைக்கும் போரிஸ் ஜான்சன் தந்தையானார்.

பிறகு, 2018 ம் ஆண்டு முதல் கேரி சைமண்ட்ஸ் உடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020 ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2021ல் இவர்களுக்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

latest tamil news

இந்நிலையில் கேரி சைம்ண்ட்ஸ் கடந்த மே மாதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‛‛ எங்கள் குடும்பத்தில் இன்னும் ஓரிரு வாரத்தில் புதிய உறுப்பினர் இணைந்துவிடுவார். என்ன குழந்தை பிறக்க போகிறது என்பதில் ஆர்வமாக உள்ளோம்” எனக்கூறினார். இதனையடுத்து போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு கடந்த 5-ம் தேதி குழந்தை பிறந்ததாக செய்திகள் வெளியாயின. இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை கேரி சைம்ண்ட்ஸ் வெளியிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.