Google Maps, Mappls-ல் விபத்து, சாலை மூடல்களை எவ்வாறு புகாரளிப்பது? இதோ வழிகாட்டி

இந்தியாவில் பருவமழை மிகவும் எதிர்பார்க்கப்படும் பருவங்களில் ஒன்றாகும். இது நாட்டிற்கு 70-80 சதவீத மழைப்பொழிவைக் கொண்டுவருகிறது. விவசாயம் உள்ளிட்டவை எல்லாம் இந்த பருவமழையை நம்பியே உள்ளன. இன்றைய சூழலில் உலக வெப்பநிலை அதிகரித்து வருவதால், அவற்றின் தாக்கம் பருவமழையிலும் காணப்படுகிறது. குறிப்பாக பருவமழையின் போது குறுகிய காலத்தில் கடுமையான மழைப்பொழிவு என்பது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. நாட்டின் தற்போதைய உள்கட்டமைப்பு இந்த வகையான தீவிர வானிலை நிகழ்வுகளை சமாளிக்க முடியவில்லை. இது நீர் தேக்கம், சாலையில் குழிகள், நிலச்சரிவுகள் மற்றும் சில சமயங்களில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம், அவை பாலங்களை உடைப்பது ஆகியவற்றுக்கு வழிவகுக்கின்றன.

இந்தக் காரணங்களால், மழைக்காலத்தில் விபத்துகள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. ஆனால் நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக, Google Maps மற்றும் Mappls போன்ற தளங்களில் மக்கள் எதிர்கொள்ளும் விபத்துகள், சாலை மூடல்கள், தண்ணீர் தேங்குதல் மற்றும் பலவற்றைப் புகாரளிக்கலாம். இதன் மூலம் ஒருவரின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றலாம். உங்களுக்கே கூட ஆபத்தான நேரங்களில் இந்த தொழில்நுட்பத்தின் தேவை இருக்கலாம் என்பதால் தெரிந்து கொள்ளுங்கள். 

Google Maps, Mappls இல் விபத்துகள், சாலை மூடல்கள், தண்ணீர் தேங்குதல் மற்றும் பலவற்றை எவ்வாறு புகாரளிப்பது? இதோ வழிமுறை

* உங்கள் மொபைலில் கூகுள் மேப்ஸைத் திறந்து உங்கள் இலக்கு இடத்தை (செல்லும் இடம்) உள்ளிடவும்.

* வழிசெலுத்தலைத் தொடங்கி, உங்கள் வழித் தகவலைக் காட்டும் பாக்ஸிலிருந்து இருந்து மேலே ஸ்வைப் செய்யவும்.

* வரைபடத்தின் கீழே தோன்றும் அறிக்கையைச் சேர் ஆப்சனை கிளிக் செய்யவும்.

* விருப்பங்களின் பட்டியலிலிருந்து நீங்கள் புகாரளிக்க விரும்பும் சம்பவத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

* உங்கள் அறிக்கையை உறுதிப்படுத்தவும், அருகில் பயணிக்கும் பிற பயனர்களுக்கு Google எச்சரிக்கை செய்யும்.

Mappls-ல் புகார் செய்வது எப்படி?

* உங்கள் மொபைலில் Mappls செயலியை திறந்து, திரையின் கீழ் பாதியில் தோன்றும் விரைவு அணுகல் பிரிவில் உள்ள வரைபடத்தில் போஸ்ட் ஐகானைத் கிளிக் செய்யவும்

* இங்கே, போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மீறல் போன்ற பல வகைகளைக் காண்பீர்கள். அதில் விரும்பும் ஆப்சனை கிளிக் செய்து, நீங்கள் புகாரளிக்க விரும்பும் சம்பவத்தின் வகையை தேர்ந்தெடுக்கவும்

* இப்போது, தேடலின் வலதுபுறத்தில் உள்ள திருத்து பொத்தானைக் கிளிக் செய்யவும் அல்லது வரைபடத்தில் இருந்து இருப்பிடத்தைத் தேர்வுசெய்து இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும். பயனர்கள் தாங்கள் புகாரளிக்க விரும்பும் சம்பவத்தின் விளக்கங்களையும் படங்களையும் சேர்க்கலாம் மற்றும் அவர்களின் பெயர்களை மறைக்கலாம்.

* நீங்கள் தகவலைச் சேர்த்த பிறகு, முடிந்தது பட்டனைத் தட்டவும், Mappls அதை மற்றவர்களுடன் பகிரத் தொடங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.