புதுடில்லி:பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அழைப்பின் பெயரில், வரும் 14ம் தேதி, அந்நாட்டில் நடக்க உள்ள, பிரான்ஸ் தேசிய நாளான, ‘பாஸ்டீல்’ தின அணிவகுப்பில், பிரதமர் மோடி விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
இந்த முக்கிய பயணம், இந்தியா – பிரான்ஸ் இடையே இருக்கும், 25 ஆண்டு கால வலுவான கூட்டணியை கொண்டாடும் வகையில் அமைந்து உள்ளது.
இந்நிலையில், 26 ரபேல் போர் விமானங்களையும், பிரான்சுடன் இணைந்து தயாரிக்கப்படும், ஸ்கார்பியன் கிளாஸ் நீர் முழ்கிகள் மூன்றையும் கொள்முதல் செய்ய, ராணுவ கொள்முதல் வாரியம் பரிந்துரைத்துள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடக்க உள்ள ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல், ‘விக்ராந்த்’தில் இயங்கும் படியான போர் விமானங்களுக்கும், நீர் முழ்கி கப்பல்களுக்கும் அதிக தேவை ஏற்பட்டு உள்ளது.
எனவே, இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டால், பிரான்சுடனான முக்கிய ராணுவக் கூட்டணி உட்பட இருதரப்பு உறவும், மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement