Online gambling to be taxed at 28 percent GST: Union Finance Minister announced | ஆன்லைன், சூதாட்டங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதம் வரி விதிப்பு : மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஆன்லைன் ரம்மி, காஸினோ , குதிரை பந்தயம் ஆகியவற்றிற்கு ஜி.எஸ்.டி.யில் வரி விதிதித்தும், அரிதான நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து வரிவிலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

50-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று (11 ம் தேதி) நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியது,

latest tamil news

* ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகள், குதிரை பந்தயம், மற்றும் காஸினோ சூதாட்டம் ஆகியவற்றிற்கு 28 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது.

* சிற்றுண்டி தட்டுகளுக்கு ஜி.எஸ்.டி., வரி 18 சதவீததிலிருந்து 5 சதவீதமாக குறைப்பு.

* தனியார் நிறுவனங்கள் செயற்கை கோள்களை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து வரிவிலக்கு.

* புற்றுநோய் மருந்துகள், மற்றும் அரிதான நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யில் வரிவிலக்கு.

* செயற்கை ஜரிகைக்கு ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு. இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.