Vijay: அரசியலுக்கு வந்ததும் சினிமாவுக்கு முழுக்கு: நடிகர் விஜய் அதிரடி முடிவு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் அண்மையில் தொகுதி வரியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்வு அவரின் அரசியல் பிரவேசத்திற்கான ஒரு அடித்தளமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பனையூரில் ஆலோசனை நடத்தியுள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யுடனான சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த ரசிகர்கள், நடிகர் விஜய்யிடம் அரசியலுக்கு வர சொல்லி நாங்கள் கூறும் போதெல்லாம் சிரிச்சு கொண்டே தலையாட்டுவார். விஜய் மக்கள் இயக்கத்திற்கான வார்டு மெம்பர் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம். இதனை முடித்துவிட்டு நடிகர் விஜய்யை சந்தித்தோம். அவர் அனைவரையும் பாராட்டினார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவரின் அரசியல் வருகைக்கான எல்லா ஏற்பாடுகளையும் கட்டமைப்புகளையும் செய்துவிட்டோம். அவர் கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம். அவர் எப்போது அரசியலுக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். அரசியலில் இறங்குவது என்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும், முழுமையாக அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என்று எங்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசியலை பொறுத்தவரை எங்களுக்கு அஜித், ரஜினிகாந்த் ரசிகர்கள் என அனைவரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். விஜய் நடிப்பில் அடுத்ததாக ‘லியோ’ படம் வெளியாகயிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

Maaveeran: டாக்டர் படத்தை போல் மாவீரனில்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்..!

இந்தப்படத்திற்கான தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய். இதனையடுத்து விரைவில் ‘லியோ’ படத்திற்கான டப்பிங் பணிகளை அவர் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், திரிஷா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

‘லியோ’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘தளபதி 68’ படம் உருவாகவுள்ளது. முதன்முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maamannan: நீங்க பேசுனது போதும் வாங்க: மாரி செல்வராஜை கையை பிடித்து இழுத்து வந்த உதயநிதி.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.