சென்னை: சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்குதான், உங்களுக்கு பிடிச்சா போங்க, இல்லன உங்க இஷ்டம் என்று போர்த்தொழில் நடிகை லிசா பேட்டியில் கூறியுள்ளார்.
சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், ஹரீஷ் குமார், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியானத் திரைப்படம் போர் தொழில்.
சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை அள்ளியது.
நடிகை லிசா: இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த லிசா, அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.அதில், போர் தொழிலில் படத்தில் 2 நிமிடம் மட்டும் தான் நான் வருவேன். படம் பார்த்தவர்கள் என்னைப் பற்றி பேசுவ கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரம் இவ்வளவு பேசப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
டிம்பிள் கியூன்: கன்னத்தில் டிம்பிள் இருந்ததால் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது. இதற்கு முன் என் டிம்பிளை யாரும் வர்ணித்து பாராட்டியது இல்லை. இப்போது இன்ஸ்டாகிராம் ஓப்பன் பண்ணாலே, டிம்பிள் கியூன், டிம்பிள் சீதா என்றெல்லாம் கமெண்டுகளை போட்டு என்னை வெங்கப்பட வைக்கிறார்கள்.
நடிக்க முடியவில்லை: நான் 5 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி படத்தில் நடிக்க வேண்டியது. அப்போது குடும்பத்தில் பணத்தேவை இருந்ததால், என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. நான் பி.ஆர். வேலை நான் செய்து கொண்டிருக்கிறேன். இது ஆண்களுக்கான வேலை என்ற போதும், இந்த வேலை செய்வதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. இந்த வேலையால் தான் நான் சினிமாக்குள் வருவதற்கு காரணம்.
சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு: சினிமாவில் பி.ஆர். தான் அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், இதுவரையில் அந்த மாதிரி விசயம் என்னிடம் வந்தது இல்லை. அதற்காக சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை என்று சொல்லமாட்டேன். நாம் எல்லாத்துக்கும் ஒகே என்றால் தானே, அது நடக்கும். நாம் முடியாது என்று சொல்லிவிட்டால், எப்படி முடியும்?
பிடிச்சா போங்க: நீங்கள் மறுத்தால் உங்கள் வாய்ப்பு போகலாம். அதற்காக வருத்தப்படக் கூடாது. நாம் முயற்சி பண்ணிக் கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும். பிடிக்காத ஒரு விசயத்தை செய்து விட்டு, அதன் பின் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், பிடிக்கவில்லை என்றால் தவிர்ப்பது நல்லது என்றார்.