பொன்னியின் செல்வனில் நடித்தது உண்மைதான்: விஜய் யேசுதாஸ்

பாடகர் யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் பாடகர்தான் என்றாலும் சமீபகாலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மலையாளத்தில் 'அவன்' என்ற படத்தில் அறிமுகமானவர், தமிழில் 'மாரி' படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த 'சல்மான்' என்ற 3டி படம் வெளிவந்தது. இது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் விஜய் யேசுதாஸ் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டடது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விஜய் யேசுதாஸ் கூறியிருப்பதாவது: பொன்னியின் செல்வனில் மதுராந்தகனின் (ரஹ்மான்) ஒற்றன் கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆதித்த கரிகாலனுடன் (விக்ரம்) சென்று தகவல்களைச் சேகரிக்கும் வேடம். 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். த்ரிஷாவுடனும் எனக்கு காட்சிகள் இருந்தன. ஆனால், அனைத்தையும் நீக்கிவிட்டார்கள். படத்தின் 2 பாகங்களையும் பார்த்தேன். எனது காட்சிகள் இல்லாதபோதும் சிறப்பாகவே இருந்தது. அதில் அவசியமான காட்சிகள் மட்டுமே இருந்தன. எனது காட்சிகள் படத்தில் எதுவும் இல்லாவிட்டாலும் இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தேன் என்பதே எனக்கு மகிழச்சிதான். என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.