சென்னை: காமெடி நடிகர் மயில்சாமி மறைந்து 4 மாதங்களே ஆகும் நிலையில், அடுத்தடுத்து அவரது இரு மகன்களின் மனைவிகளும் விவாகரத்துக்காக அப்ளை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த மகாசிவராத்திரி அன்று கோயிலில் இரவு கச்சேரி முடித்து விட்டு அதிகாலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்தது.
தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவரது நல்ல மனசையும் மற்றவர்களுக்கு வாரி வாரி கொடுக்கும் கொடை உள்ளத்தையும் பாராட்டி இருந்தனர்.
மயில்சாமி மறைவு: இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் மது போதைக்கு அடிமையாக இருந்தார் என்றும் அவரது மரணத்திற்கு குடிப்பழக்கம் தான் காரணமாக இருந்தது என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.
மயில்சாமிக்கு அருமை நாயகம் மற்றும் யுவன் என இரு மகன்கள் உள்ளனர். தந்தையின் இறுதிச்சடங்குகளை ஒன்றாக நின்று செய்து முடித்தனர். இந்நிலையில், மயில்சாமி வீட்டில் அடுத்தடுத்த பெரிய பிரச்சனைகள் வெடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மாமியார் மருமகள் சண்டை: அனைத்து குடும்பத்திலும் மாமியார் மருமகள் சண்டை என்பது யூனிவர்ஸல் பிரச்சனையாகவே உள்ள நிலையில், நடிகர் மயில்சாமி உயிருடன் இருந்தவரை அந்த பிரச்சனையை ஒரு பெரிய பாலம் போல இருந்து சமாளித்து வந்துள்ளார்.

அருமை நாயகம் மற்றும் யுவன் இருவருக்குமே சினிமாவில் பெரியாளாக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. ஆனால், அருமை நாயகம் சில படங்களில் நடித்தாலும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில், அப்பாவின் மரணத்திற்கு பிறகு அம்மாவையும் மனைவியையும் எப்படி சமாளிக்க வேண்டும் என்கிற வித்தை கூட இரு மகன்களுக்கும் தெரியவில்லை என்கின்றனர்.
விவாகரத்து கேட்ட மருமகள்கள்: மயில்சாமி உயிருடன் இருந்த போதே தனது இரு மகன்களுக்கும் கோலாகலமாக சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்தார்.
மூத்த மகன் அருமை நாயகத்தின் திருமணத்திற்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வருகை தந்து தம்பதியினரை வாழ்த்தி இருந்தனர். இந்நிலையில், தற்போது மயில்சாமியின் இரு மருமகள்களும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.