சென்னை: மருத்துவமனை ஒன்றில் தன்னை அசிங்கமாக தொட்ட டாக்டரை பளார் பளார் என்று அறைந்தேன் என்று ஷகிலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை ஷகிலா பல கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருக்கிறார். பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, தற்போது, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
எல்லா இடத்திலும் அட்ஜஸ்ட்மெண்ட்: யூடியூப் பேட்டிகள் பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் ஷகிலா, அவர்களிடம் துணிச்சலாக பல விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் சீரியல் நடிகை ரிஹானாவிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டார். அதற்கு ரிஹானா சினிமாவில் மட்டும் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை. எல்லா இடத்திலும் இருக்கிறது மருத்துவமனையிலும் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கிறது என்றார்.
ஷகீலா பகீர் தகவல்: அப்போது குறுக்கிட்ட ஷகிலா, மருத்துவமனையில், இதுபோன்று எனக்கும் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. நான் என் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்பதால், அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்தேன். அவர் எழுதியது எனக்கு புரியாததால், அவரிடம் சந்தேகத்தை கேட்டேன்.

அசிங்கமாக தொட்ட டாக்டர்: அப்போது அவர் என் அருகில் வந்து என்னை தவறான முறையில் தொட்டு என்ன சந்தேகம் இப்போ சொல்லு என்றார். உடனே நான் பளார் பளார் என்று அவரை பயங்கரமாக அடித்தேன். நான் அடித்த சத்தம் கேட்டு வெளியில் இருந்த நர்ஸ் உள்ளே வந்து தடுத்து, என்னை சமாதானப்படுத்தி அனுப்பினார்.
மோசமான சம்பவம்: அது எந்த மருத்துவமனை அந்த மருத்துவர் யார் என்று எனக்கு சொல்ல விருப்பம் இல்லை. ஆனால், இந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டு இருக்கும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், நிச்சயமா நான் அடுத்த வீடியோவில் சொல்கிறேன். இதை நான் இப்போது சொல்வதற்கு காரணம், சினிமா துறையில் மட்டுமில்லை அனைத்து துறையிலும் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு என்று தன் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் குறித்து ஷகிலா மனம் திறந்து பேசினார்.